வகைப்பாட்டியல் விளக்க மொழி (டெல்டா)

டெல்டா (DEscription Language for TAxonomy)(வகைப்பாட்டியலுக்கான விளக்க மொழி) என்பது உயிரினங்களின் விளக்கங்களைப் பதிவு செய்வதற்கு வகைப்பாட்டியலில் பயன்படுத்தப்படும் தரவு வடிவமாகும். இது கணினி செயலாக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அடையாள திறவுகளை உருவாக்க அனுமதிக்கிறது.[1]

இது ஒரு தரநிலையாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பைப் பயன்படுத்திப் பல நிரல்கள் பல்வேறு வகைபிரித்தல் பணிகளுக்குக் கிடைக்கின்றன.

இது 1971 முதல் 2000ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஆத்திரேலியாவில் உள்ள பொதுநல வாய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி அமைப்பின் ஆத்திரேலியப் பூச்சியியல் பிரிவினால் வடிவமைக்கப்பட்டது, இதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை மைக்கேல் ஜே. டால்விட்சு மேற்கொண்டார். மிகச் சமீபத்தில், அட்லசு ஆப் லிவிங் ஆத்திரேலியா டெல்டா மென்பொருளை ஜாவாவில் மீண்டும் எழுதியது. இதனால் இதனை ஜாவா சூழலில் மற்றும் பல இயக்க முறைமைகளில் இயக்க முடியும். மென்பொருள் தொகுப்பை இப்போது அடலசு ஆப் லிவிங் ஆத்திரேலியா தளத்தில் காணலாம் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம்.[2]

டெல்டா அமைப்பு

தொகு

டெல்டா அமைப்பு என்பது டெல்டா வடிவத்தில் கட்டமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நிரல்களின் குழுவாகும். முக்கிய நிரல் டெல்டா தொகுப்பி ஆகும். இது எத்தனை வகைப்பாட்டியல் பிரிவிற்கும் எழுத்துகளின் தளங்களை உருவாக்குவதற்கான இடைமுகத்தை வழங்குகிறது. இண்ட்கீ (Intkey) எனப்படும் ஊடாடும் அடையாள விசையின் வெளியீட்டை அனுமதிக்கும் டெல்டா தொகுப்பிலிருந்து நிரல்களின் முழு தொகுப்பையும் கண்டுபிடித்து இயக்கலாம்.[3] மற்ற சக்திவாய்ந்த அம்சங்களில் இயற்கையான மொழி விளக்கங்கள், முழு அறுதியிடல் மற்றும் வகைப்பாட்டுப் பிரிவுகளுக்கிடையேயான வேறுபாடுகள் ஆகியவை அடங்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Dallwitz, M. J. "DELTA - DEscritption Language for Taxonomy".
  2. "Open DELTA". Atlas of Living Australia.
  3. Dallwitz, M. J. (1980). "A General System for Coding Taxonomic Descriptions". Taxon 29 (1): 41–46. doi:10.2307/1219595. 

வெளி இணைப்புகள்

தொகு