வங்காலா
வங்காலா என்பது மேகாலயாவில் வாழும் காரோ இன மக்களின் நடனத் திருவிழாவாகும். இந்த விழாவில் காரோ இன மக்கள் தங்கள் பாரம்பரிய நடனங்களை ஆடுவர். இந்த விழா முக்கிய மழைக்காலத்தில் மூன்று நாட்கள் நடத்தப்படும்.[1] இந்த விழா 1976ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இவர்கள் அறுவடையில் கிடைக்கும் முதல் உணவு தானியங்களை சூரியக் கடவுளுக்கு படைப்பது வழக்கம். இந்த நடனத்துக்கு ஒரு செவிவழிக் கதையும் சொல்கின்றனர். இந்த நடனம் நீர்வாழ் உயிரினங்களின் நடனமாக இருந்ததாகவும், நண்டின் மூலம் மனிதர்கள் கற்றுக் கொண்டதாகவும் நம்புகின்றனர்.[2]