வங்காளதேச ஆயுதப்படைகள் நோயியல் நிறுவனம்
வங்காளதேச ஆயுதப்படைகள் நோயியல் நிறுவனம் (Armed Forces Institute of Pathology) வங்காளதேசத்தின் டாக்கா ஆயுதப்படை இராணுவ முகாமில் அமைந்துள்ளது. ஒரு மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகமாக இந்நிறுவனம் செயல்படுகிறது.
வரலாறு
தொகுஆயுதப் படைகளின் நோயியல் நிறுவனம் முதலில் இராணுவ நோயியல் நிறுவனம் என்ற பெயரில் பாக்கித்தான் இராணுவத்தின் ஒரு பகுதியாக சிறு ஆய்வகமாக நிறுவப்பட்டது. [1] வங்காளதேசம் சுதந்திரம் அட்டைந்த பிறகு இது வங்காளதேச இராணுவத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1974 ஆம் ஆண்டு ஆயுதப் படைகளின் நோயியல் நிறுவனம் மறுசீரமைக்கப்பட்டு இங்கு நவீன உபகரணங்கள் மீண்டும் பொருத்தப்பட்டன. [2][3][4] மருத்துவ அறிவியலில் இதன் பன்னாட்டு அளவு பங்களிப்புக்காக 1987 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்திற்கு சுதந்திர தின விருது வழங்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டில் இராணுவ நோயியல் ஆய்வகம் என்ற பெயர் மாற்றப்பட்டு ஆயுதப்படை நோயியல் நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது. [5]
மருத்துவ அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளுடன் நிறுவனம் எப்போதும் முன்னேற முயல்கிறது. அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் வல்லுநர்களின் ஒருங்கிணைப்பு இந்த நிறுவனத்தை நாட்டின் ஆய்வக மருத்துவத்தில் மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உதவியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "An amazing health persona" (in en). The Daily Star. 2008-06-25. http://www.thedailystar.net/news-detail-42654.
- ↑ "An extraordinary man" (in en). The Daily Star. 2009-06-24. http://www.thedailystar.net/news-detail-93995.
- ↑ "Myanmar Army team arrives in Dhaka" (in en). The Daily Star. 2014-10-16. http://www.thedailystar.net/myanmar-army-team-arrives-in-dhaka-45934.
- ↑ "University of Professionals inaugurated" (in en). The Daily Star. 2008-10-17. http://www.thedailystar.net/news-detail-59119.
- ↑ "List of Army Medical College - Bangladesh Army". www.army.mil.bd. பார்க்கப்பட்ட நாள் 2019-07-24.