வங்காளதேச கரும்பு ஆராய்ச்சி நிறுவனம்
வங்காளதேச கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் (Bangladesh Sugarcrop Research Institute) என்பது, கரும்பு மற்றும் தொடர்புடைய தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஒரு தன்னாட்சி தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது வங்காளதேசத்தின் பாப்னாவில் உள்ள இசுவர்தி உபாசிலாவில் அமைந்துள்ளது.[1] இந்நிறுவனம் விவசாய அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
உருவாக்கம் | 1931 |
---|---|
தலைமையகம் | இசுவார்தி உப்பசிலா, பாப்னா, வங்காளதேசம் |
சேவை பகுதி | வங்காளதேசம் |
ஆட்சி மொழி | வங்காளம் |
வலைத்தளம் | www |
வரலாறு
தொகு1931ஆம் ஆண்டு டாக்காவில் கரும்பு நாற்றுப் பரிசோதனை நிலையம் நிறுவப்பட்டது. இது 1953-ல் கரும்பு ஆராய்ச்சி நிலையமாக மாற்றப்பட்டு வேளாண்மைத் துறையின் கீழ் வந்தது. வங்காளதேச சர்க்கரை மற்றும் உணவுத் தொழில்கள் கழகம் 1973இல் இந்த நிறுவனத்தின் பொறுப்பினை ஏற்றுக்கொண்டது. 1996ஆம் ஆண்டு வங்காளதேச கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் பாராளுமன்றத்தின் சட்டத்தின் மூலம் தன்னாட்சி நிறுவனமாக மாற்றப்பட்டது.[2][3] இது பேரீச்சம்பழம் மற்றும் கரும்பு சாகுபடிக்குத் துணைபுரிகிறது.
படங்கள்
தொகு-
வங்காளதேச கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் கரும்பு வயல்கள்
-
வங்காளதேச கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சிக்கான கரும்பு
-
வங்காளதேச கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை வாயில்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bangladesh Sugarcane Research Institute". Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 15 October 2016.
- ↑ "Jessore's signature date juice gets scarce". The Daily Star. 21 February 2016. http://www.thedailystar.net/backpage/date-juice-road-be-history-575461.
- ↑ "Power-sugar plant likely in the north". The Daily Star. 28 June 2010. http://www.thedailystar.net/news-detail-144406.