வங்காளத்தின் நாட்டுப்புறக் கதைகள்
வங்காளத்தின் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் விசித்திரக் கதைகளின் தொகுப்பாகும்
வங்காளத்தின் நாட்டுப்புறக் கதைகள் என்பது பாதிரியார் லால் பிஹாரி டே என்பரால் எழுதப்பட்ட வங்காளத்தின் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் விசித்திரக் கதைகளின் தொகுப்பாகும்.[1] இந்த புத்தகம் 1883 ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. வார்விக் கோபிலின் விளக்கப்படங்கள் 1912 ம் ஆண்டு பதிப்பில் சேர்க்கப்பட்டன.[2] இந்தக் கதைகள் அனைத்தும் பல நூற்றாண்டுகளாக தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு வாய்மொழியாக சொல்லப்பட்டவைகள் ஆகும்..
கதைகள்
தொகுஇந்த பட்டியல் 1912ம் ஆண்டு பதிப்பின் உள்ளடக்கங்கள் (பக்கம் xi) இல் குறிப்பிடப்பட்டுள்ள கதைகளை பட்டியலிடப்பட்டுள்ளது. புத்தகத்தில் இவை ஆங்கில பெரிய எழுத்துக்களில் எழுதபட்டுள்ளது.
- வாழ்க்கையின் ரகசியம்
- பகீர் சந்த்
- ஏழை பிராமணன்
- ராட்சசர்களின் கதை
- ஸ்வீட்-பசந்தாவின் கதை
- சனியின் தீய கண்
- ஏழு தாய்மார்கள் பாலூட்டிய சிறுவன்
- இளவரசர் சோபூரின் கதை
- ஓபியத்தின் தோற்றம்
- அடி ஆனால் கேள்
- இரண்டு திருடர்கள் மற்றும் அவர்களின் மகன்களின் சாகசங்கள்
- பேய் மற்றும் பிராமணன்
- பூரணமாக இருக்க விரும்பிய நாயகன்
- ஒரு பேய் மனைவி
- ஒரு பிரம்மாதையாவின் கதை
- ஒரு ஹிராமனின் கதை
- மாணிக்கங்களின் தோற்றம்
- பொருத்தம் பார்த்த குள்ளநரி
- நெற்றியில் சந்திரனைக் கொண்ட சிறுவன்
- பொதியிடப்பட்டதை கண்டு பயந்த பேய்
- எலும்புகளின் புலம்
- வழுக்கை மனைவி
மேற்கோள்கள்
தொகு- ↑ Sinhal, Kounteya (9 April 2015). "Lost history unearthed in Scot Cemetery". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/kolkata/Lost-history-unearthed-in-Scot-Cemetery/articleshow/46856194.cms. This article fashions the author's name "Lalbehari De". The 1912 title page credits "Rev. Lal Behari Day" (all caps).
- ↑ Folk Tales of Bengal. Macmillan and Co. 1883.
வெளிப்புற இணைப்புகள்
தொகு- Folk-Tales of Bengal (1912 illustrated ed.) as Project Gutenberg #38488