வங்கா நரி ஜல்லிகட்டு

தைப் பொங்கலை ஒட்டி நடக்கும் நிகழ்வு

வங்கா நரி ஜல்லிகட்டு (Vanga fox jailed) என்பது தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் பொங்கல் விழாவை ஒட்டி 200 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படும் ஒரு விளையாட்டு ஆகும்.

இது சேலம் மாவட்டத்தில் கிழக்குப்பகுதியில் உள்ள வாழப்பாடி, ஆத்தூர் நகரங்களை ஒட்டிய கிராமங்களில் நடத்தப்படுகிறது.[1] ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கலுக்கு மறுநாள் ஊரில் உள்ள இளைஞர்கள் ஊர் மாரியம்மன் கோயிலில் வழிபட்டுவிட்டு, வங்கா நரியைப் பிடிக்க காட்டுக்குள் செல்வர். அங்கு வலை விரித்து வங்கா நரியைப் பிடித்து ஊருக்கு கொண்டு வருவர்.[2] வங்கா நரி கிடைக்காவிட்டாலும் காட்டினுள்ளே பல நாட்கள் காத்திருந்து நரியைப் பிடித்துவருவர். நரியை பிடித்த பிறகு கிராமத்துக் கோயிலில் சிறப்பு பூசை செய்து, கோயிலுக்கு நரியைக் கொண்டுவந்து அதற்கும் சிறப்புப் பூசை செய்வர். பின்னர் நரியை ஒரு கயிறுகொண்டு கட்டி அதை கோயிலைச் சுற்றியும், ஊரைச்சுற்றியும் ஓட விடுவர். இதுவே வங்கா நரி ஜல்லிகட்டு என்பதாகும். இந்த நிகழ்வுகள் முடிந்தபிறகு நரியை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிடுவர்.[3]

இவ்வாறு செய்தால் ஊரை நோய் நொடி அண்டாது, வேளாண்மை செழிக்கும் என்பது இம்மக்களின் நம்பிக்கை ஆகும். வங்கா நரியைப் பிடிப்பதற்கு தமிழ்நாடு வனத்துறை தடை விதித்துள்ளது. இருந்த போதிலும் மக்கள் இப்பழக்கதைக் கைவிடவில்லை. வங்கா நரியை பிடிக்க வனத்துறை விதிக்கும் அபராதத் தொகையை ஊர்மக்கள் சர்பில் செலுத்திவிடுகின்றனர்.

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்கா_நரி_ஜல்லிகட்டு&oldid=3090943" இருந்து மீள்விக்கப்பட்டது