வங்கி பணியாளர் தேர்வாணையம்

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection (IBPS), இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேர்வு நிறுவனம் ஆகும். இந்தியாவில் இயங்கும் அரசுடமை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்வதே இதன் பணியாகும்.

வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனம்
சுருக்கம்IBPS
உருவாக்கம்1975
வகைஇந்திய அரசின் பணியாளர் தேர்வு முகமை
நோக்கம்அரசுடமை வங்கிப் பணியாளர்களை தேர்வு செய்தல்
தலைமையகம்மும்பை, இந்தியா
சேவை
இந்தியா
ஆட்சி மொழி
ஆங்கிலம் மற்றும் இந்தி
தலைவர்
ஜி. இராஜ்கிரண் ராய்
இயக்குநர்
பி அர்தீஷ் குமார்
தாய் அமைப்பு
இந்திய அரசின் நிதி அமைச்சகம்
வலைத்தளம்www.ibps.in

இது இளங்கலை பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் முனைவர் பட்டங்களை வங்கிப் பணியில் சேர்ப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 1975-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது தொகுதி ஏ பிரிவு, பி பிரிவு மற்றும் சி பிரிவு அதிகாரிகளையும் மற்றும் ஊழியர்களையும் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்கிறது.

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் ஒரு தன்னாட்சி அமைப்பாக செயல்படுகிறது. இது முக்கியமாக வங்கித் துறையில் எழுத்தர் மற்றும் அதிகாரிகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வுகளை நடத்துகிறது.

முன்னர் ஒவ்வொரு வங்கியும் நடத்தும் பல போட்டித் தேர்வுகளை எழுத வேண்டியிருந்தது. ஆனால் 2012 முதல் ஒவ்வொரு ஆண்டும் வங்கி மேலாண்மை அதிகாரிகள், சிறப்பு அதிகாரிகள், எழுத்தர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் என நான்கு பிரிவுகளில் போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மும்பை, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் அண்ட் ஃபைனான்ஸ், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்க் மேனேஜ்மென்ட், இந்தியன் வங்கிகள் சங்கம் போன்ற அரசு நிறுவனங்களின் பரிந்துரையாளர்களை உள்ளடக்கிய வாரியத்தால் வங்கிப் பணியாளர்கள் தேர்வானையம் நிர்வகிக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு