வசீலி பெசென்கோவ்
வசீலி கிரகொரியேவிச் பெசென்கோவ் (Vasiliy Grigorievich Fesenkov, உருசியம்: Васи́лий Григо́рьевич Фесе́нков, சனவரி 13, 1889 - மார்ச்சு 12, 1972) ஒரு சோவியத், உருசிய வானியற்பியலாளர் ஆவார்.
வாழ்க்கை
தொகுஇவர் நோவொசெர்காசுக்கில் பிறந்தார். இவர் 1911 இல் கார்க்கோவ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பிரகு இவர்பாரீசுப் பல்கலைக்கழகமாகிய சோபான்னேவில் சேர்ந்தார். இங்கு இவர் முனைவர் பட்டத்தினை 1914 இல் பெற்ரார்; இதர்கிடையில் இவர் பாரீசு நகர மியூடன், நைசு வான்காணகங்களிலும் பணிபுரிந்தார்.[1] இவர் உருசிய வானியற்பியல் நிறுவனத்தை 1923 இல் உருவாக்கியவர்களில் ஒருவராவார். இது பின்னர் சுட்டெர்ன்பர்கு வானியல் நிறுவனம் எனப் பெயர் மாற்றப்பட்டது. இங்கு இவர் 1936 முதல் 1939 வரை இயக்குநராகப் பணிபுரிந்தார். இவர் 1935 இல் சோவியத் ஒன்றிய அறிவியல் கல்விக்கழகத்தின் கல்வியாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர்தான் ஒளியளவியலைப் பயன்படுத்தி புவிமுனைச் சுடரொளியை ஆய்வை மேற்கொண்டு அதன் இயங்குமுறையை விளக்கினார்.
இவர் அல்மாத்தியில் பெசென்கோவ் வானியற்பியல் நிறுவனத்தை உருவாக்கினார். மேலும் அதன் இயக்குநராக 1964 வரை செயல்பட்டார். இவர் கழ்சாக்தான் அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினரும் ஆவார்.
இவர் அண்டவியல், கோள் அறிவியல், சூரிய குடும்ப வானியல் ஆகிய துறைகளில் பணிபுரிந்தார். இவர்1947 இல் துங்குசுகா நிகழ்விட்த்துக்குச் சென்று மொத்தல் வான்பொருளின் பொருண்மையையும் அதன் வட்டணையையும் மதிப்பிட்டார்.இதே மதிப்பீட்டை இவர் 1947 இல் வீழ்ந்த சிகோட்-அலின் விண்கல்லுக்கும் செய்தார்.
இவருக்கு மூன்று இலெனின் ஆணைகளும் ஒரு செம்பதாகை ஆணையும் பல பதக்கங்களும் தரப்பட்டன. செவ்வாயின் ஒரு குழிப்பள்ளம் பெசென்கோவ் குழிப்பள்ளம் என இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.
சோவியத் வானியலாளர் நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக் 1977 இல் கண்டுபிடித்த 2886 பெசென்கோவ் எனும் சிறுகோள் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.[2]
இவர் மாஸ்கோவில் இறந்தார்.
நூல்தொகை
தொகு- Life in the universe by A. Oparin and V. Fesenkov, New York, Twayne Publishers, 1961
- Soviet IGY studies in zodiacal light by Fesenkov V.G., New York, U. S. Joint Publications Research Service, 1959
மேற்கோள்கள்
தொகு- ↑ Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் August 22, 2012.
- ↑ Schmadel, Lutz D. (2003). Dictionary of Minor Planet Names (5th ed.). New York: Springer Verlag. p. 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-00238-3.