வசுதாரா பால்பண்ணை
வசுதாரா பால்பண்ணை (Vasudhara Dairy) என்பது இந்தியாவிலுள்ள ஓர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆகும். வல்சாடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் என்ற பெயரில் இச்சங்கம் செயல்படுகிறது. குசராத்து மாநிலத்தில் இருக்கும் நவ்சாரி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள சிகிலி என்ற கிராமத்திற்கு அருகில் தோராயமாக 3 கிலோமீட்டர் தொலைவில் இப்பால்பண்ணை அமைந்துள்ளது. அமுல் என்ற வர்த்தகப் பெயரில் உள்ளூர் சந்தைக்குத் தேவையான பால் மற்றும் நெய் (தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய்) இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இப்பண்ணையின் தற்போதைய உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 400,000 லிட்டர் ஆகும். குளிர்பாலேடு (ஐசுகிரீம்), பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் இந்நிறுவனத்தின் கிளைகள் நாக்பூர், போய்சார் போன்ற நகரங்களில் உள்ளன. அமுல் ஐசுகிரீம் என்ற பெயரில் உற்பத்தி செய்யப்படும் குளிர்பாலேடு மும்பை மற்றும் மகாராட்டிர சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது.
வல்சாடு, நவ்சாரி மற்றும் தேங்கு ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு இந்த தொழிற்சங்கம் பால்பொருட்களின் தேவையை நிறைவு செய்கிறது. குசராத்தின் அனைத்து கூட்டுறவு பால் உற்பத்தி நிலையங்களிலும் முதன்முதலாக 1997 ஆம் ஆண்டில் அமுல் என்ற வர்த்தகப் பெயரில் குளிர்பாலேடு தயாரிப்பு வணிகத்தில் நுழைந்தது இப்பால்பண்னையே ஆகும். போய்சார் நகரில் இருந்த இந்த குளிர்பாலேடு தயாரிக்கும் ஆலை, குசராத்தில் இருந்து இடம்பெயர்ந்து வியாபாரத்திற்காக மகாராட்டிராவிற்கு சென்றது [1].
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Prashant Rupera (2012-05-24). "Vasudhara Dairy chalks out vision 2015". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/vadodara/Vasudhara-Dairy-chalks-out-vision-2015/articleshow/13422274.cms. பார்த்த நாள்: 2014-06-29.