வச்சனந்திமாலை

வச்சனந்திமாலை என்பது ஒரு தமிழ்ப் பாட்டியல் நூல். இதன் ஆசிரியர் வச்சன்.

பாட்டியல் என்பது பாடப்படும் தலைவன் பெயரிலுள்ள எழுத்துக்குப் பொருத்தம் பார்ப்பது. எழுத்துக்களுக்குப் பாட்டியல் நூலில் சாதி-வருணம், ஓரை (ராசி), நட்சத்திரம் முதலானவை கூறப்பட்டிருக்கும். திருமணத்துக்குச் சிலர் சாதகப் பொருத்தம் பார்ப்பது போலப் பாடப்படும் தலைவனுக்கும் பொருத்தம் பார்த்துப் பொருத்தமான எழுத்துக்கள் அமைந்த சொற்களால் தொடங்கிப் பாடுவார்கள்.

தமிழில் வடமாழி கலப்புக்குப் பின்னர் இத்தகைய போலி நம்பிக்கை உள்ள நூல்கள் தோன்றின.

கருவிநூல்

தொகு
  • வச்சனந்திமாலை (உரையுடன்), தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வச்சனந்திமாலை&oldid=3831834" இலிருந்து மீள்விக்கப்பட்டது