வஜுருல் இஸ்லாம் (இந்திய இதழ்)

வஜுருல் இஸ்லாம் இந்தியா கூத்தாநல்லூரிலிருந்து 1924ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • மு. அப்துல்லா

பொருள் தொகு

'வஜுருல் இஸ்லாம்' எனும் அரபுப் பதம் 'இஸ்லாமிய ஆலோசகர்' என பொருள்படும்

உள்ளடக்கம் தொகு

'வஜுருல் இஸ்லாம்' ஆரம்பத்தில் பர்மாவிலிருந்து வெளிவந்தது. அதன் ஆசிரியர் இந்தியா வந்த பின்பு இந்தியாவிலிருந்து வெளியிட ஆரம்பித்தார். இவ்விதழ் 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் வெளிவந்த இதழாக உள்ளதினால் அக்கால சூழ்நிலைக்கேற்ப எழுத்து நடையினையும், ஆக்கங்களையும் கொண்டிருந்தது. குறிப்பாக இசுலாமிய அடிப்படை விடயங்கள் தொடர்பான கருத்துகளுக்குரிய விளக்கங்கள், இந்திய இசுலாமியர்களின் மார்க்க ரீதியான பிரச்சினைகளுக்குரிய விளக்கங்கள் என்பன இவ்விதழில் இடம்பெற்றிருந்தன.