வஜ்ஜிரபள்ளம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வஜ்ஜிர பள்ளம் என்பது கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை அருகில் இராயக்கோட்டை கிருட்டிணகிரி சாலையில் உள்ள ஆன்மீக திருத்தலம் ஆகும். இக்கோயிலின் முக்கிய சிறப்பு யாதெனில் இக்கோயிலின் தல விருட்சம் போல் அமைந்திருக்கும் மரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து நீர் ஊற்றெடுத்து வழிவதே ஆகும் . இதற்கு புராண கால வரலாறும் உண்டு. மகா ரிஷி துர்வாச முனிவர் ஆதி காலத்தில் இராயகோட்டை மலையில் தவமிருக்கும் போது, இப்பகுதி மக்கள் தண்ணீர் பஞ்சம் தீர அருள வேண்டும் என கேட்டார்கள். உடனே முனிவர் யாம் எய்யும் அம்பு வீழும் இடத்திலிருந்து நீர் ஊற்றெடுக்கும் என அருளி அம்பினை எய்தார். எய்த அம்பு இக்கோவில் மரத்தின் துளைத்ததாகவும் அங்கிருந்தே நீர் ஊற்றெடுப்பதாகவும் ஐதீகம் நிலவுகிறது.