வடநெடுந்தத்தனார்
வடநெடுந்தத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 179. நாலைகிழவன் நாகன் என்பவனின் வல்லாண்மை இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[1]
வல்லாண்முல்லை செய்தி
தொகுவாகைத்திணையின் துறைகளில் ஒன்றாகத் தொல்காப்பியம் இதனை வல்லாண் பக்கம் என்று குறிப்பிடுகிறது.[2] வேலேந்திப் பகைவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவது வல்லாண் பக்கம். வல்லமையைக் காட்டும் ஆண்மைப் பகுதி என்பது இதன் பொருள். நாலை கிழவன் பாண்டிய அரசனின் போர்மறவன். இவன் பாண்டியனுக்குப் படை தேவைப்பட்டபோது வாள்வீரர் படைத் திரட்டித் தந்தான். இதனால் இவனது செயல் வல்லாண் பக்கம் ஆயிற்று.
புறப்பொருள் வெண்பாமாலை இதனை வல்லாண் முல்லை என்று குறிப்பிடுகிறது.[3]
அடிக்குறிப்பு
தொகு- ↑
'ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்தென,
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்?' என வினவலின், மலைந்தோர்
விசி பிணி முரசமொடு மண் பல தந்த (5)
திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன்,
படை வேண்டுவழி வாள் உதவியும்,
வினை வேண்டுவழி அறிவு உதவியும்,
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்து, (10)
தோலா நல் இசை, நாலை கிழவன்,
பருந்து பசி தீர்க்கும் நற் போர்த்
திருந்து வேல் நாகன் கூறினர், பலரே. - ↑ பெரும் பகை தாங்கும் வேலினானும்,
அரும் பகை தாங்கும் ஆற்றலானும்,
புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்; (தொல்காப்பியம் புறத்திணையியல் 3-75 - ↑ புறப்பொருள் வெண்பாமாலை வாகைப்படலம் நூற்பா 154