வடிகுழாய் (மருத்துவம்)

மருத்துவத்தில், வடிகுழாய் (catheter) பல சிறப்பு செயற்பாடுகளுக்காக மருத்துவப் பண்புடை பொருட்களால் உருவாக்கப்பட்ட நுண்ணிய குழாய் ஆகும். இந்த மருத்துவக் கருவிகள் நோய்களுக்கான தீர்வாகவோ அறுவைச் சிகிச்சை செய்முறையின் அங்கமாகவோ உடலில் செருகப்படுகின்றன. பொருட்களை மாற்றியோ உருவாக்கும் முறையை சீராக்கியோ வடிகுழாய்கள் இதயக்குழாய், சீறுநீர்க் குழாய், இரையக குடலிய குழல், நரம்புகுழல் அல்லது கண் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றது.

வடிகுழாய்
பிரிக்கப்பட்ட வடிகுழாய்

வடிகுழாய்கள் உடற்குழி, நாளங்கள், குருதிக்குழல்களில் செருகப்படுகின்றன. செயற்பாட்டில், இவை நீர்மங்களையோ வாயுக்களையோ செலுத்தவும் மருத்துவக் கருவிகளுக்கான அணுக்கம் தரவும் மற்றும் பிற செயல்களுக்காகவும் பயனாகின்றன.[1] வடிகுழாயை செருகும் செயல் "சிலாகையேற்றல்" (catheterization) எனப்படுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. Diggery, Robert (2012). Catheters: Types, applications and potential complications (medical devices and equipment. Nova Science. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1621006301.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடிகுழாய்_(மருத்துவம்)&oldid=3595264" இலிருந்து மீள்விக்கப்பட்டது