வடிவமைப்புப் பாங்கு

(வடிவமைப்புக் கோலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நிரலாக்கத்தில் வடிவமைப்புப் பாங்கு (Design Pattern) என்பது ஒத்த சிக்கல்களுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய தீர்வுகளைக் குறிக்கிறது. நிரலை வடிவமைக்கும் பொழுது ஏற்படும் சிக்கல்களுக்கு அமையக் கூடிய தீர்வே வடிவமைப்புப் பாங்கு ஆகும். ஒரு தீர்வு சீர்தரப்படுத்தப்படு நிரல் மொழியின் ஒரு கூறாக ஆகிவிட்டால், அதன் பின் அவை வடிவமைப்புப் பாங்கு எனப்படாது.

வடிவமைப்புப் பாங்குகள் பெரிய மென்பொருள் திட்டங்களை வடிவமைக்க, நிறைவேற்ற, பராமரிக்க உதவுகின்றன.

வடிவமைப்புப் பாங்கை தீர்வுப்பாங்கம் எனவும் அழைக்கலாம். பல முறை ஒரு தீர்வை பயன்படுத்திய பின், அதன் பின்புலம் பற்றி ஆயும் போது வெளிபடுவதுதான், தீர்வுப்பாங்கம். தீர்வுப்பாங்கம் பட்டறிவின் வெளிப்பாடு. தீர்வுப்பாங்கம் மூன்று பகுதிகளை கொண்டது.

  1. சூழல் (Context)
  2. தீர்க்கபட வேண்டிய பிரச்சனை / இடர் (Problem)
  3. தீர்வுப்பாங்கத் தீர்வு (Solution)

எந்த சூழலில் இந்த தீர்வுப்பாங்கத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை விவரிப்பது, தீர்வுப்பாங்கத்தின் சூழல். அப்படி விவரிக்கபட்ட சூழலில் எழும் இடரை தீர்ப்பதுதான் தீர்வுப்பாங்கத்தீர்வு. விவரிக்கபட்ட சூழலில் இருந்து உங்கள் சூழல் வேறுபட்டு இருந்தால் தீர்வுப்பாங்கத்தீர்வு வேலை செய்யாது.


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடிவமைப்புப்_பாங்கு&oldid=3227850" இலிருந்து மீள்விக்கப்பட்டது