வட்டக்கண்டல் படுகொலைகள்

வட்டக்கண்டல் படுகொலைகள் எனப்படுவது இலங்கை, மன்னார் மாவட்டத்தில் உள்ள வண்டக்கண்டல் என்ற ஊரில் 1985 ம் ஆண்டு சனவரி 30 திகதி இலங்கைப் படைத்துறையினர் நேரடியாக தாக்கியதிலும், வானூர்திகள் மூலம் தாக்கியதிலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.[1] படுகொலை செய்யப்பட்டவர்களில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பதினெட்டுப் பேரும் அடங்குவர்.

மேற்கோள்கள் தொகு

  1. வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம். (2009). தமிழினப் படுகொலைகள் 1956 - 2008. சென்னை: மனிதன் பதிப்பகம்.