வட்டமலைக்கரை ஓடை அணை

வட்டமலைக்கரை அணை (Vattamalalai Karai Odai) என்பது திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அருகே உத்தமபாளையத்தில் உள்ள ஒரு அணையாகும். இந்த அணை 1978 இல் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 268 மில்லியன் கன அடிகள்.[1] இந்நீர் தேக்கத்தில் இருந்து 6060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இந்த அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததால் பல பத்தாண்டுகளாக நீரின்றி வரண்டு காணப்படுகிறது. இதனால் இந்த அணைக்கு அமராவதி ஆற்றில் இருந்து நீரைக் கொண்டுவர ஒரு திட்டம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.[2]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டமலைக்கரை_ஓடை_அணை&oldid=2570628" இருந்து மீள்விக்கப்பட்டது