வட்ட அமைவு

வட்ட அமைவு (Whorl) என்பது தாவரங்களின் தண்டின் கணுப்பகுதிகளில் அதைச் சுற்றி இலைகளோ, கிளைகளோ, அல்லி இதழ்களோ மற்றும் புல்லி இதழ்களோ அல்லது பூவின் பாகங்களோ அமையும் விதம் ஆகும்.[1][2] அவ்வாறு அமையும் போது அவற்றின் எண்ணிக்கை நான்கும் அல்லது அதற்கு மேலும் இருக்க வேண்டும்.

MichiganLilyStem.jpg
Brabejum stellatifolium - new growth.JPG

விதையுறை உடைய தாவர மலர்களில் (ஆஞ்சியோசுபெர்ம்) வட்ட அமைவுதொகு

  1. புல்லி வட்டம்
  2. அல்லி வட்டம்
  3. மகரந்தத்தாள் வட்டம்
  4. சூலக வட்டம்

முழுமையற்ற மலர்தொகு

மேலேயுள்ள ஏதாவதொரு வட்டம் இல்லாதிருந்தாலும், அத்தகைய மலர் முழுமையற்ற மலர் என வழங்கப்படுகிறது.[3] உதாரணம் மேக்னோலியேசி.

மிகக்குறுகிய கணுவிடைப்பகுதியுடைய தண்டுத்தொகுதிகளைப் பெற்றிருக்கும் தாவரங்களிலேயே வட்ட அமைவு பெரும்பாலும் காணப்படுகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. "whorl". thedictionary. 19 August 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. Lindley, John. A Glossary of Technical Terms Used in Botany, p.100, Bradbury and Evans, London, 1848.
  3. Beentje, H.; Williamson, J. (2010). The Kew Plant Glossary: an Illustrated Dictionary of Plant Terms. Royal Botanic Gardens, Kew: Kew Publishing. https://archive.org/details/kewplantglossary0000been. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்ட_அமைவு&oldid=3622454" இருந்து மீள்விக்கப்பட்டது