வட அமெரிக்காவின் வரலாறு

வட அமெரிக்காவின் வரலாறு, வட அமெரிக்க கண்டத்தின் மக்களுடைய கடந்தகால முன்னேற்றங்களைக் கொண்டுள்ளது. 40,000 முதல் 17,000 ஆண்டுகளுக்கு முன்னர் பெரிங் கடலைக் கடந்து மக்கள் குடியேறியபோது இக்கண்டம் முதன்முதலாக ஒரு மனித வாழ்விடம் ஆனதாகப் பரவலாக நம்பப்பட்டது.[1] சமீபத்திய கண்டுபிடிப்புகள் அந்த மதிப்பீட்டை குறைந்தபட்சம் 90,000 ஆண்டுகளுக்கு முன்னது எனக்கூறுகின்றன.[2] இருந்தாலும், குடியேறியவர்கள் தொலைதூர வடக்கிலுள்ள இனுவிட்டுகளிலிருந்து தெற்கில் உள்ள மாயன்கள் மற்றும் அசுதெக்குகள் வரை கண்டத்தின் பல இடங்களில் குடியேறினர். இந்த தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்கள் ஒவ்வொன்றும் தங்கள் தனித்துவமான வாழ்க்கையையும் கலாச்சாரங்களையும் அபிவிருத்தி செய்தன. அத்திலாந்திக்குப் பெருங்கடல் தாண்டி ஐரோப்பா, ஆசியா முழுவதும் இருந்த பரந்த வர்த்தக மற்றும் நாகரிகங்களின் மோதல்களுடன் ஒப்பிடுகையில் இக்கண்டத்தில் ஒருவருக்கு ஒருவருடனான தொடர்பு ஒரு வரையறைக்குள் தான் இருந்தது. 

விளக்கப்படமாக வட அமெரிக்காவின் ஒரு ஒருங்கிணைந்த செயற்கைக்கோள் புகைப்படம்

உசாத்துணை தொகு

  1. "Atlas of the Human Journey-The Genographic Project". National Geographic Society. 1996–2008. Archived from the original on மே 1, 2011. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 6, 2009.
  2. A 130,000-year-old archaeological site in southern California, USA

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_அமெரிக்காவின்_வரலாறு&oldid=3588111" இலிருந்து மீள்விக்கப்பட்டது