வட அமெரிக்க தானுந்து தொழிற்துறை நெருக்கடி, 2008 - 2009
வட அமெரிக்க தானுந்து தொழிற்துறை நெருக்கடி என்பது 2008 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் இயங்கும் முப் பெரும் தானுந்து உற்பத்தியாளர்களான General Motors, Ford, Chrysler ஆகியவற்றின் விற்பனை வீழ்ச்சியடைந்து, நிதிநிலைமை மோசமடைந்தைக் குறிக்கிறது. இந்த நிலைமை 2009 தொடரும் என எதிர்பாக்கப்படுகிறது. வீட்க் குழுமி, வங்கிகள் வீழ்ச்சி, உயர் எரிபொருள் விலை, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றைத் தொடர்ந்து தானுந்துகளின் விற்பனை வீழ்ச்சி பெற்றது. இதனால் முப் பெரும் உற்பத்தியாளர்களின் பல்வேறு தொழிற்சாலைகளை மூடப்பட்டன. இதில் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்தனர். இதை மேலும் தொடராமல் தடுப்பதற்கு ஐக்கிய அமெரிக்க, கனடிய அரசுகள் இந்த வணிக நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்வது பற்றி பரிசீலிக்கின்றன.
வட அமெரிக்க தானுந்து தொழிற்துறையின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஜப்பானிய, தென் கொரிய, ஜேர்மன் உற்பத்தியாளர்களைப் போல் எரி பொருளை திறனாக பயன்படுத்த வல்ல அடக்கமான தரமான தானுந்துகளை உற்பத்திசெய்யாமல், எரி பொருளை அதிகம் பயன்படுத்தும் பெரிய SUV அதிகம் உற்பத்தி செய்தது ஒரு முக்கிய காரணமாக பாக்கப்படுகிறது.
இதைத் தவிர வட அமெரிக்க தொழிளார்கள் கூடிய சம்பளத்தையும் சலுகைகளையும் பெறுவதால், ஆசிய ஐரோப்பிய தானுந்துகளின் விலையோடு போட்டி போட முடியவில்லை.