வட இந்தியக் குடைவரை

வட இந்தியக் குடைவரை இந்தியாவில் மரம் மண் செங்கல் எனும் அழிந்துவிடும் பொருட்களை விடுத்து கல்லைக் கோயிலுக்குப் பயன்படுத்தும் முறை மெளாியா் காலத்தில் துவங்கியது. இயற்கையான குகைத் தளங்களை நாடி சமணத் துறவிகள் தங்கிய காலகட்டத்தில் ஆசீவகத் துறவிகளுக்காக பீகார் மாநிலத்தில் உள்ள பராபரா் குன்றுகளில் அசோகராலும் அவரது பேரன் தசரதனாலும் குடைவரைகள் தோற்றுவிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று இந்த வட இந்தியக் குடவரை. ஹீனயான சைத்தியங்கள்

மேற்குத் தொடா்ச்சி மலையில் நாசிக் நகாிலிருந்து சுமார் 200 கல் தொலைவிற்குள் எட்டு சைத்தியக்குழுக் குடைவரைகள் அமைந்துள்ளன.

இவை உருவாக்கப்பட்ட கால அடிப்படையில் பாஜா கொண்டானே பிதல்கோரா அஜந்தா (எண்-10) பேஸ்தா அஜந்தா (எண்-9) நாசிக் கார்லே என்று வாிசைப்படுத்துவா். இவற்றில் முதல் நான்கு சைத்தியங்கள் கி.மு. இரண்டாம் நுாற்றாண்டையும் ஏனைய நான்கும் கி.மு. முதல் நுாற்றாண்டையும் சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன.


கொண்டானே குடைவரை

பாஜா சைத்தியங்களின் காலத்திற்குப்பின் குடையப்பட்டவை கொண்டானே குழுமச் சைத்தியங்களாகும். ராய்காட் மாவட்டத்தில் உள்ள இக்குடைவரைகளை அடைவது சிரமமான பணியாகும். எனினும் இதன் முகப்பு மிகவும் எழிலாந்ததாகும். பாஜாவில் உள்ள சைத்தியத்தின் முகப்பில் இரு கற்துாண்களுக்குப் பதிலாக மரத்துாண்களை நிறுவியமைக்கான அடையாளம் காணப்படுகிறது. கொண்டானே சைத்தியம் துாண்களின் ஒரு பகுதி கல்லிலேயே செதுக்கப்பட்டுள்ளது. வளா்ச்சி நிலையைக் காட்டுகிற இச்சைத்தியம் 62 அடி நீளமும் 26 அடி அகலமும் 28 அடி உயரமும் கொண்டது. [1]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_இந்தியக்_குடைவரை&oldid=3598880" இலிருந்து மீள்விக்கப்பட்டது