வணிகக் காற்று
வணிகக் காற்று அல்லது தடக்காற்று என்பது நிலநடுக்கோட்டு வெப்பமண்டல வளிமண்டலத்தின் கீழடுக்கின் கீழ்ப்பகுதியில் வீசும் காற்றோட்டமாகும். புவியின் வடஅரைக்கோளத்தில் வடகிழக்காகவும் தென்அரைக்கோளத்தில் தென்கிழக்காகவும் இக்காற்று வீசும்.[1]

பல நூற்றாண்டுகளாக இக்காற்றோட்டத்தைப் பயன்படுத்தியே மாலுமிகள் கடலில் தங்கள் கப்பலைச் செலுத்தி வாணிகஞ் செய்து வந்ததால் இக்காற்று வணிகக்காற்று எனப் பெயர் பெற்றது.
மேற்கோள்கள் தொகு
- ↑ Glossary of Meteorology (2010). "trade winds". American Meteorological Society. http://amsglossary.allenpress.com/glossary/search?id=trade-winds1. பார்த்த நாள்: 2008-09-08.