வணிகப் பகுப்பாய்வாளர்

வணிகப் பகுப்பாய்வுகளை மேறகொள்பவர் வணிகப் பகுப்பாய்வாளர் என்று அழைக்கப்படுகிறார். இத்தொழிலை புரிபவர் வியாபார, அரசாங்க, இலாப நோக்கற்ற நிறுவனங்கள் எவ்வாறு செயற்படுகிறது எனவும் அவற்றுக்குள்ள பிரச்சினைகளையும் ஆராய்வதே இவரது கடமை.

நான்கு வகையான வணிகப் பகுப்பாய்வுகள்

தொகு

குறைந்த்து நான்கு வகையான வணிகப் பகுப்பாய்வுகள் காணப்படுகின்றன. அவையாவன:

  1. முக்கிய திட்டங்களை வகுத்தல்- நிறுவனத்திற்கு தேவையான முக்கிய திட்டங்களை ஆராய்தல்
  2. நிறுவனத்தை ஆராய்தல்- நிறுவனத்தின் சந்தை மற்றும் கொள்கைகள் பற்றி ஆராய்தல் மற்றும் நிறுவனத்தின் நோக்கங்களை ஆராய்தல்
  3. செயற்பாட்டை நிறுவுதல்- நிறுவனத்தின் நோக்கங்களை அடையத்தக்க செயற்பாடுளை ஆராய்ந்து நிறுவுதல்
  4. தகவல்தொழில்நுட்பத்தில் வணிகப் பகுப்பாய்வாளர்கள்- வர்த்தக சட்டங்களையும் தேவைகளையும் ஆராய்ந்து தகவல்தொழில்நுட்பத்தை வர்த்தகத்தில் சேர்த்தல்

மென்பொருள் அபிவிருத்தி செய்யும் செயற்பாட்டில் வணிகப் பகுப்பாய்வாளர் வர்த்தகத்தையும் மென்பொருள் அபிவிருத்தி செய்பவர்களையும் இணைக்கும் முகமாக தொழில்படுவார்.

வணிகப் பகுப்பாய்வாளர் ஒப்படைப்பவைகள்

தொகு

வர்த்தக ஆராய்ச்சியானது பரந்த வீச்சை கொண்டது. தொழிற்நுட்ப ரீதியான வர்த்தக ஆராய்ச்சி தொடக்கம் உரிமையாளர் விருப்பு மற்றும் துணிச்சல் என்பவற்றை பொறுத்து நிறுவனத்தின் முக்கிய திட்டங்களை வகுத்தல் வரை பரந்துள்ளது.

பின்வருவன பகுதி வர்த்தக ஆராய்ச்சியை தகவல் தொழில்நுட்ப நோக்கில் பார்க்கிறது. வர்த்தக ஆராய்ச்சியானது தேவைகளை ஏதேனுமொரு முறையில் சேர்த்து வைத்து கொள்ளும்.

வர்த்தக தேவைகள்: நிறுவனத்தின் பரந்த நோக்கங்களை ஆராய்ச்சி செய்வதாக அமையும்.

தொழிற்பாட்டு தேவைகள்: வர்த்தக தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு பகுதியும் எவ்வாறு தொழில்பட வேண்டும் என்பதை ஆராய்ச்சி செய்வதாக அமையும்.

உபயோகிப்பவரின் தேவைகள்: உபயோகிப்பவரின் தேவைகள் சரியான முறையில் ஆராய்ச்சி செய்து புரிந்து கொள்ளப்பட வேண்டும். தொழிற்பாடு அல்லாத தேவைகள்: வர்த்தக தேவைகளை பூர்த்தி செய்யாவிடினும் அவை வர்த்தகத்தை மெருகூட்டுவதாக அமையும். தரம், பாதுகாப்பு என்பன இதற்கு சில உதாரணங்கள் ஆகும். மென்பொருளை அமுல் படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அறிக்கை கட்டமைப்பு: அறிக்கையின் நோக்கம், உபயோகிப்பவர்கள், காரணங்கள், விளக்கங்கள் என்பன தெளிவாக உள்ளடக்கப்படவேண்டும்.

வணிகப் பகுப்பாய்வாளர் ஆவதற்கான தகுதிகள்

தொகு

வணிகப் பகுப்பாய்வாளர் ஆவதற்கானமுன் இருக்க வேண்டிய தேவைகள் / நிபந்னைகள்:

வணிகப் பகுப்பாய்வாளர் ஆவதற்கு குறித்த நிச்சயித்த வழிகள் இல்லை.பொதுவாக வணிகப் பகுப்பாய்வாளர்கள் தொழில்நுட்ப அறிவைகொண்டிருப்பர். அவர் பொறியியலாளர், மென்பொருள் பொறியியலாளர் அல்லது கணணி விஞ்ஞான பட்டப்படிப்பை மேற்கொண்டவராக இருக்கலாம். அல்லது வர்த்தக பின்னனியை கொண்டவராக இருக்கலாம்.

வியாபார அறிவு மற்றும் ஆராய்ச்சி செய்யும் ஆற்றல் இத்தொழிலுக்கு பொருத்தமாக அமையும். திட்ட முகமையாளர், அறிவுரை கூறும் நிபுணர் என்பவர்களின் பணி வர்த்தக ஆராய்ச்சியாளரின் பணியுடன் சில கடமைகளில் பொருந்தும்.

வணிகப் பகுப்பாய்வாளர் எப்பொழுதும் தகவல் தொழில்நுட்ப சார்ந்த திட்டங்களில் ஈடுபடுவது இல்லை. சந்தைப்படுத்தல் மற்றும் பண கொடுக்கல் வாங்கல்களிலும் இப்பணி பயன்படும்.

வணிகப் பகுப்பாய்வாளர்கள் இன்று வங்கி, காப்புறுதி, தொடர்பாடல், மென்பொருள் அபிவிருத்தி போன்ற பல்வேறு துறைகளில் தொழில் புரிய முடியும். வணிகப் பகுப்பாய்வாளர்கள் ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு இலகுவாக மாற முடியும் ஏனெனில் வணிகப் பகுப்பாய்வாளர்கள் பொதுவாக அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவது இல்லை மாறக உயர்ந்த பணிகளையே செய்வார்கள்.

வணிகப் பகுப்பாய்வாளர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட குறித்த பாத்திரம் இல்லை. அவர்களின் நிலையை பொறுத்து அவர்களின் பாத்திரம் வரையறுக்கப்படும். அதனால் அவர்களின் நிலையை பொறுத்து வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுவர்.


மென்பொருளும் வணிகப் பகுப்பாய்வாளர்களும்

தொகு

மென்பொருள் அபிவிருத்தியில் வணிகப் பகுப்பாய்வாளர்களை பயன்படுத்துவதன் நன்மைகள்:

மென்பொருள் அபிவிருத்தியில் வணிகப் பகுப்பாய்வாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. வர்த்தக பிரிவினர் தங்களுடைய மென்பொருளை மிக விரைவாக தாம் நினைத்த வண்ணம் பெற விரும்புவார்கள். அதே வேளை மென்பொருள் அபிவிருத்தியாளர்கள் தங்களுக்கு விளங்கிய விதத்தில் மென்பொருளை அபிவிருத்தி செய்து கொடுக்க விரும்புவார்கள். மென்பொருள் அபிவிருத்தியாளர்களுக்கு வர்த்தக அனுபவம் இல்லாத்தால் வர்த்தக பிரிவினர் எதிர்பார்ப்பதை மென்பொருள் அபிவிருத்தியாளர்களால் வழங்க முடியாமல் போகலாம். இதனால் பல முரண்பாடுகள் இரு சாராரிடையேயும் ஏற்படும்.

அண்மைக்காலமாக வெவ்வேறு விதமான ஆராய்ச்சியாளர்களை திட்டங்களில் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். திட்ட முகாமையாளர்கள், மென்பொருள் அபிவிருத்தியாளர்களுக்கும் வர்த்தக பிரிவினருக்கும் இடையே காணப்படும்தொடர்பாடல் குறைபாட்டை நீக்க வணிகப் பகுப்பாய்வாளர்களை பயன்படுத்துகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வணிகப்_பகுப்பாய்வாளர்&oldid=1929881" இலிருந்து மீள்விக்கப்பட்டது