வணிக வண்டி
ஒரு ஒட்டக தொடர் வண்டி அல்லது வணிக வண்டி என்பது தொடர்ச்சியாக ஒட்டகங்கள் மூலம் பயணிகள் மற்றும்/அல்லது பொருட்களை அடிக்கடி அல்லது எப்போதாவது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப் பயன்படுவதாகும். ஒட்டகங்கள் எப்போதாவது தான் மனிதர்களின் நடக்கும் வேகத்தை விட வேகமாகப் பயணிக்கின்றன. எனினும் அவை கடினமான சூழ்நிலைகளைத் தாங்கக்கூடியவை. இதன் காரணமாக தகவல் தொடர்பிற்கும் வணிகத்திற்கும் வட ஆப்பிரிக்கா மற்றும் அரேபியப் பாலைவனங்களில் ஒட்டகங்கள் நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒட்டகத் தொடர் வண்டிகள் உலகம் முழுவதும் பிற பகுதிகளிலும் மிகக்குறைந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன. 20ம் நூற்றாண்டில் இருந்து இவற்றிற்குப் பதிலாக பெரும்பாலும் இயந்திர வண்டிகள் அல்லது வானூர்திகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.[1]