வண்டலூர் காப்புக் காடுகள்
வண்டலூர் காப்புக்காடுகள் (Vandalur Reserve Forest) சென்னையின் தென்மேற்குப் பகுதியில் உள்ள வண்டலூரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது நகரின் மையப்பகுதியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி மேற்கில் மாபெரும் தெற்கு வழித்தடத்தாலும், வடக்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில் சுந்தானந்த பாரதி தெருவாலும் தெற்குப்பகுதியில் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையாலும் சூழப்பட்டுள்ளது. இந்திய துணைக்கண்டத்தில் உள்ள மிகப்பெரிய விலங்கியல் பூங்காவான அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா இந்தக் காப்புக் காட்டில் அமைந்துள்ளது.
வரலாறு
தொகு1976ஆம் ஆண்டில், 1,265 ஏக்கர் (512 ஹெக்டேர்) பரப்பளவில் உள்ள ஒரு பகுதி, தமிழ்நாடு வனவியல் திணைக்களம் முதலில் அமைக்கப்பட்ட சென்னை மிருகக்காட்சிசாலையின் புதிய இடமாகக் குறிக்கப்பட்டது (ஆரம்பத்தில் பூங்கா நகரில்).[1] 1979ஆம் ஆண்டில் 75 மில்லியன் ஆரம்ப செலவில் வேலை ஆரம்பமானது, சூலை 24, 1985 அன்று, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டில், மிருகக்காட்சிக்கு அருகில் அமைந்துள்ள 92.45 ஹெக்டேர் (228.4 ஏக்கர்) நிலப்பரப்பு மிருகக்காட்சிசாலைக்காக கையகப்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட காட்டு விலங்குகளுக்கு ஒரு மீட்பு மற்றும் புனர்வாழ்வு மையத்தை உருவாக்கபட்டது. இதன் காரணமாக இந்த மிருகக்காட்சி சாலையின் அளவு 1,490 ஏக்கர் (602 ஹெக்டேர்) அளவிற்கு அதிகரிக்கப்பட்டது.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Vandalur zoo gets ready to celebrate". behindindia.com. Behind India. 16 ஆகத்து 2010. Archived from the original on 22 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2011.