வண்டி உருட்டல்
வண்டி உருட்டுதல் சிறுவர்களின் பொழுதுபோக்கு விளையாட்டு. நடைவண்டி, இழுவண்டி, உருட்டு-வண்டி என இவற்றைப் பாகுபடுத்திக்கொள்ளலாம்.
கையில் கிடைக்கும் வளையங்களைக் கோலால் தட்டியும், கோலால் உந்தியும் உருளச் செய்து அதனுடன் ஓடுதல் சிறுவர்களின் பொழுதுபோக்கு விளையாட்டு
- சங்ககாலம்
- காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபயிலும் சின்னஞ்சிறு பிள்ளைகள் முக்கால் சிறுதேர் உருட்டி விளையாடிய உள்ளது.[1]
- பிள்ளைத்தமிழ்
- ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் பத்தாவது பருவமாக வருமாறு பாடபடுகின்றன. [2]
- நடைவண்டி
- நடைவண்டியை உருட்டிக்கொண்டு நடக்கச் செய்து குழந்தைகளுக்கு நடை பழக்குவர்
- இழுவண்டி
- தென்னைமட்டைகளையும் வாழைமட்டைகளையும் பயன்படுத்தி அதன்மேல் சிறுவர்களை அமரச்செய்து இழுத்துச்சென்று திளைப்பர்.
- உருட்டுவண்டி
- இரும்பு வளையங்களைக் கவைக்கோலால் தள்ளி உருட்டுவர்.
- சைக்கிள் ரிம்களை குச்சி ஒன்றால் உந்தி உருட்டிச் சென்று மகிழ்வர்.
- சைக்கிள் போன்றவற்றின் வண்டி டயர்களைக் கோலால் தட்டி உருட்டிச் சென்று மகிழ்வர்.