வண்ணக்கன் சோருமருங் குமரனார்

வண்ணக்கன் சோருமருங் குமரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 257 எண் கொண்ட பாடல். இது குறிஞ்சித்திணை மேலது,

வண்ணக்கன் = பொன்னையும், நாணயத்தையும் மாற்றுப் பார்ப்பவன்.
சோரும், மரும் = மாற்றுப் பார்க்கும்போது மாற்றுக் குறைந்தால் சோர்தலும், மாற்றுச் சரியானால் மருவதலும் கொள்பவர்.

பாடலில் உள்ள செய்தி

தொகு

மலைநாட! ஈரக் கசிவால் ஆள் நடமாட்டம் இல்லாத (சதசத) வழியில், கொல்லும் விலங்குகள் நடமாடுவது அறிந்தும் நள்ளிரவில் என்னைத் தேடி வருகிறாய். நீ வரும் வழியை எண்ணும்போது என் மனம் நோகிறது என்று தலைவி தலைவனிடம் தெரிவிக்கிறாள். அவன் மலைநாடு

மூங்கில் ஒலியும், அருவி ஒலியும் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருக்குமாம். மழை பெய்து வேங்கை அரும்பு விட்டு மலர்ந்து பாறைகளில் கொட்டுமாம். (இறைச்சி: மூங்கில் - மூங்கில் போல் சுற்றம் கொண்டவன். அருவி - சுற்றத்தாரின் ஈரமொழி. வேங்கைப்பூ பாறைமேல் கொட்டுதல் - தலைவன் தலைவியின்மேல் தாவல்)