வண்ணக் கண்ணாடி மற்றும் வண்ணம் உருவாக்குதல்

[1][2]வண்ணம் என்பது கண்ணாடிப் பொருள்களுக்கு ஒரு முக்கிய பண்பாகும். இந்த பண்பு இவற்றை அழகுள்ளதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் உருவாக்கும். கண்ணாடி அல்லது கண்ணாடி உருவாக்குதல் கீழ்கண்ட சில முறைகள் மூலம் உருவாக்கப் படுகின்றன. 1. வண்ண அயனிகளைச் சேர்ப்பதன் மூலம். 2. நானோ மீட்டர் அளவிலான கூழ்மங்களை வீழ்படிவாக்குவதன் மூலம் (கண்ணைப் பறிக்கும் வண்ணம் கொண்ட "பொன் ரூபி" வண்ணம் கொண்ட கண்ணாடி அல்லது "சிவப்பு செலினியம் ரூபி"). 3. பால் வண்ண கண்ணாடியில் காணப்படுவது போல வண்ணங்களை உள் சேர்ப்பது 4.ஒளியை சிதறடிப்பதன் மூலம். 5. இருநிறங்களை பூசுவதன் மூலம்(இருநிற கண்ணாடிகளைப் பார்க்க). 6. அல்லது வண்ணம் பூசுவதன் மூலம்.

Amber Glass
Uranium glass glowing under UV light
Cobalt glass for decoration

வண்ண அயனிகள்

தொகு

சாதாரண சோடாக் கண்ணாடியை நாம் வெறும் கண்ணால் பார்க்கும் போது அது வண்ணமற்ற ஒரு பொருளாகவேத் தெரியும். ஆனால் சில வேளைகளில் அந்த கண்ணாடியில் காணப்படும் இரும்பு ஆக்ஸைடு மற்றும் மற்றும் சில தூசுகள் அதை பச்சை வண்ண தோற்றத்தை தருவதாக காண்பிக்கும். ஆனால் அந்த வண்ணங்கள் மிகத் தடிமனான கண்ணாடிகளில்தான் காண முடியும்.சில வேளைகளில் கண்ணாடி தயாரிக்கும் போது உலோகம் மற்றும் உலோக ஆக்ஸைடுகள் கண்ணாடியோடு சேர்க்கப் படுகின்றன. கண்ணாடிப் பொருள்களின் அழகைக் கூட்டுவதற்காக இவை சேர்க்கப் படுகின்றன. கீழே அவற்றிற்கான எடுத்துக் காட்டுகள் கொடுக்கப் பட்டுள்ளன.

  • இரும்பு II ஆக்ஸைடு கண்ணாடியோடு சேர்க்கப் படும்போது அது நீல-பச்சை வண்ணத்தை கொடுக்கிறது. இது பொதுவாக பீர் பாட்டில்களில் உபயோகிக்கப் படுகிறது. குரோமியத்தோடு சேர்ந்து அடர் பச்சை நிறத்தைக் கொடுக்கிறது அது வைன் பாட்டில்களில் பயன்படுகிறது.
  • கந்தகம் இரும்பு மற்றும் கார்பனோடு சேர்ந்து பல்வகை சல்ஃபைடுகள் தயாரிக்க உதவுகிறது. இவைகள் அம்பர் பாட்டில்களை உருவாக்குகின்றன. இவைகள் அடர் மஞ்சள் வண்ணம் முதல் கருப்பு வண்ணம் வரை உள்ள பாட்டில்கள் தயாரிப்பில் உதவுகின்றன. போரான் மிகுதியாக உள்ள போரோ சிலிகேட் பாட்டில்களில் இந்த சல்ஃபைடுகள் சேர்க்கப் படும்போது அவை அடர் நீல வண்ணத்தைக் கொடுக்கின்றன. கால்சியத்தோடு மஞ்சள் வண்ணத்தைக் கொடுக்கின்றன.
  • மாங்கனீசு இரும்பு ஆக்ஸைடால் கொடுக்கப் பட்ட பச்சை வண்ணத்தை நீக்க சிறிய அளவில் பயன்படுத்தப் படுகிறது. அதிக அளவில் பயன் படுத்தும் போது செவ்வந்தி வண்ணம் கிடைக்கிறது. மாங்கனீசு ஆதி காலங்களில் இருந்தே வண்ணமேற்ற பயன்படும் ஒரு சேர்பொருளாகும். ஊதா மாங்கனீசு பாட்டில்களில் ஆதி எகிப்து வரலாற்றில் காணப் படுகிறது.
  • மாங்கனீசு ஆக்ஸடு கருப்பு வண்ணத்தில் காணப் படும். இது பொதுவாக இரும்பால் கிடைக்கும் பச்சை வண்ணத்தை நீக்க பயன்படுகிறது. ஆனால் இது அப்படியே வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களோடு வினை புரியும்போது மிக மெதுவாக அடர் ஊதா நிறமுள்ள சோடியம் பெர்மாங்கனேட் சேர்மமாக மாறுகிறது. இங்கிலாந்தில் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட சில வீடுகளில் உள்ள கண்ணாடிகள் இவ்வாறு வெளிர் ஊதா நிறத்தில் மாற்றமடைந்துள்ளன. இவைகள் அரும் பழம் பொருளாகக் கருதப் படுகிறது.
  • சிறிதளவு கோபால்ட் சேர்க்கப் படும்போது (0.025-0.1%) நீல நிறம் கொடுக்கிறது. பொட்டாஷ் கலந்த பாட்டில்களில் இவற்றைச் சேர்க்கும் போது அருமையான வண்ணம் கிடைக்கும்
  • 2-3% காப்பர் ஆக்ஸைடு நீல பச்சை வண்ணத்தைத் தரும்

[[பகுப்பு : திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்களால் தொடங்கப் பட்ட கட்டுரைகளின் தொகுப்பு]]

[[பகுப்பு : கனிம வேதியல்]]

[[பகுப்பு: கண்ணாடிக்கு வண்ணமிடுதல்]]

[[பகுப்பு : கண்ணாடியில் பொறியியல்]]

[[பகுப்பு: கண்ணாடியும் வேதியலும்]].

  1. https://en.wikipedia.org/wiki/Glass_coloring_and_color_marking
  2. http://geology.com/articles/color-in-glass.shtml