வண்ணத்தர்
வண்ணத்தர் என்ற சொல் பல்வேறு மனப்பாங்குகளை உடையவர் என்னும் பொருளில் நீதி நூல் ஒன்றில் காணப்படுகிறது. [1] நிலத்தின் தன்மைக்கு ஏற்பப் பறவைகளின் வண்ணங்கள் வேறுபடுவது போல, குலத்துக்குக் குலம் மக்களின் மனப்பாங்கு மாறுபடும் என அது சுட்டுகிறது.
அடிக்குறிப்பு
தொகு- ↑ ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேரும் திறம் அரிதால்;-தேமொழீஇ!-ஆரும்
குலக் குல வண்ணத்தர் ஆகுப; ஆங்கே,
புலப் புல வண்ணத்த, புள். (பழமொழி நானூறு 340)