வதாயோ ஃபகர்

சிந்து பகுதியைச் சேர்ந்த ஒரு பழம்பெரும் தத்துவஞானியாவார்

வதாயோ ஃபகர் ( சிந்தி : وتايو فقير ) என்பவர் பாகிஸ்தானின் சிந்து பகுதியைச் சேர்ந்த ஒரு பழம்பெரும் தத்துவஞானியாவார். அவரது ஞானம் மற்றும் தத்துவத்தின் அடிப்படையிலான பல நாட்டுப்புற கதைகள் பரவலாகப் பரவி, " கச்சேரி " எனப்படும் பாரம்பரியக் கூட்டங்கள் வழியாக சிந்தி நாட்டுப்புறக் கதைகளில் குழந்தைகளுக்குச் சொல்லப்படுகின்றன .[1] [2] அவர் தனது தத்துவக்கதைகளில் நகைச்சுவை , வாழ்க்கையின் முரண்பாடு மற்றும் நோக்கம் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்தியுள்ளார். 7

வதாயோ ஃபகர் 1643 ம் ஆண்டு உமர்கோட் இன்றைய தார்பார்கர் மாவட்டத்தில் பிறந்தார். அவருடைய இயற் பெயர் வடன்மால் என்பதாகும். அவர் 70 வயதில் கி.பி 1712 இல் இறந்தார். தற்போதைய தாண்டோ அல்லையார் மாவட்டத்தில் உள்ள நசர்பூருக்கு அருகிலுள்ள தாஜ்பூர் அவரது தந்தையின் ஊர் எனவும் அவரது பெயர் மேளாராம் என்றும் கருதப்படுகிறது. வதாயோ ஃபகர், ஷா இனயத் ரிஸ்வியுடன் ஊர் ஊராக பயணம் செய்த காரணத்தால், அவர் ஒரு முஸ்லீம் என்றும், மதர்சா மக்தூம் இஸ்மாயிலுடன் தொடர்பு பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.}

கல்லறை

தொகு
 
பாகிஸ்தானின் சிந்துவில் உள்ள தாண்டோ அல்லையாரில் உள்ள வதாயோ ஃபகீரின்கல்லறை

அவரது கல்லறை - குடாப் ( சிந்தி : قطب) பல தத்துவஞானிகளின் விவாத மையமாக உள்ளது. தத்துவக் கதைகளில் அவரது நிபுணத்துவம் பாராட்டுக்குரியது என்பதில் சந்தேகமில்லை. சிந்தி மொழியில் அவரது கல்லறையில் உள்ள வார்த்தைகள் பின்வருமாறு:

சிந்தியில்

آئون ايئن اڳ هئس جيئن اوھين اڄ آهيو (ஆசுன் அய்ஸன் ஆக் ஹிஸ் ஜிஜின் அவுகின் ஆக் ஆஹியோ)

ஆங்கிலத்தில் :

As I was yesterday, so you are today, as I am today, so you will be tomorrow.

தமிழில் : நான் நேற்று இருந்ததைப் போல, இன்று நீயும், இன்று நான் இருப்பது போல, நீ நாளையும் இருப்பாய் .

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Sayid Ghulam Mustafa (1 January 1997). English Essays of Pakistan. Ferozsons. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-969-0-01374-3. பார்க்கப்பட்ட நாள் 29 July 2013.
  2. Pakistan Pictorial. Pakistan Publications. 1980. p. ix. பார்க்கப்பட்ட நாள் 29 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வதாயோ_ஃபகர்&oldid=3656979" இலிருந்து மீள்விக்கப்பட்டது