வத்தல் குழம்பு

சுண்டைக்காய் வற்றல் குழம்பு தென்னிந்திய உணவு வகைகளில் ஒன்று.

தேவையான பொருட்கள்

தொகு
  • சுண்டைக்காய் வற்றல் (Solanum torvum (Turkey Berry) - 1 கைப்பிடி
  • புளி எலுமிச்சை அளவு
  • மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  • வெல்லம் 25 கிராம்
  • அரிசி மாவு 1-2 தேக்கரண்டி
  • எள் எண்ணெய் 1/2 கோப்பை
தாளிக்க
  • கடுகு 2தேக்கரன்டி
  • கறிவேப்பிலை 1 கோப்பை
  • பெருங்காயம் 2 தேக்கரண்டி
  • கடலைப் பருப்பு 3தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு 3தேக்கரண்டி
  • வற்றல்மிளகாய் 5 எண்ணம்
  • மிளகு 1 தேக்கரண்டி
  • வெந்தயம் 1 தேக்கரண்டி
  • எள் எண்ணெய் 2 தேக்கரண்டி
வறுத்து அரைக்க
  • கொத்தமல்லி விதை 2 தேக்கரண்டி
  • கடலைப் பருப்பு 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை 1 கொத்து
  • வெந்தயம் 1 தேக்கரண்டி
  • வற்றல்மிளகாய் 6 எண்ணம்
  • பெருங்காயம் 1/2 தேக்கரண்டி
  • எள் எண்ணெய் 1 தேக்கரண்டி

செய்முறை

தொகு

வாணலியில் எண்ணெய்விட்டு தனித்தனியாக வறுக்க வேண்டியதை கருகவிடாமல் வறுத்து நீர் விட்டு அரைக்கவும். புளியை 1-2 கோப்பை நீரில் ஊற வைக்கவும். அரிசி மாவு 1/2 கோப்பை நீரில் கரைக்கவும்.

வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய்விட்டு வற்றல் நிறம் மாறும் வரை வறுக்கவும். அதே வாணலியில் வற்றலோடு புளிக் கரைசல் ஊற்றி உப்பு,மஞ்சள் தூள், வெல்லம், மிளகாய் தூள்,அரிசி மாவு கரைசல் சேர்த்து 15 நிமிடம் கொதிக்கவிடவும். புளி வாசனை போனதும் வறுத்து அரைத்த மசாலாவை இட்டு கொதிக்கவிடவும். கொதியல் அடர்த்தியாகும் வரை கொதிக்கவிடவும்.

மற்றொரு வாணலியில் மீதமுள்ள எண்ணெயைவிட்டு தாளிக்க வேன்டியதை ஒன்றன் பின் ஒன்றாக இட்டு பொரிந்ததும் குழம்பில் ஊற்றவும். எண்ணெய் பிரிந்து மேலே வரும்வரை கொதிக்கவிட்டு இரக்கவும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வத்தல்_குழம்பு&oldid=3286728" இலிருந்து மீள்விக்கப்பட்டது