வந்தவாழ்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
வந்தவாழ் அல்லது பண்டுவாள் என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் அமைந்திருக்கும் தென் கன்னட மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும், வட்டாட்சிப் பகுதியும் ஆகும். வந்தவாழ் குறுக்குச் சாலை என்பது இந்நகரத்தின் வணிக மையமாக திகழ்கின்றது.
வரலாறு
தொகுவந்தவாழ் நகரம் வடபுர சேத்திரம் எனவும் சில சமூகங்களால் அழைக்கப்படுகின்றது. நேத்திராவதி ஆற்றங்கரையோரத்தில் கிழக்கு மங்களூர் செல்கின்ற தேசிய நெடுஞ்சாலை 73 அருகே இந்நகரம் அமைந்திருக்கின்றது.
பண்டைய காலங்களில் வந்தவாழ் வணிக நகரமாக திகழ்ந்திருந்தது. நேத்திராவதி ஆற்றில் அடிக்கடி ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் இங்கிருந்த பல வணிகர்களும், வியாபாரிகளும் வந்தவாழ் குறுக்குச் சாலைப் பகுதிக்கு இடம்பெயர்ந்துவிடனர்.
1852-யிற்கு முன் வந்தவாழ் தாலுகா கன்னட மாகாணத்தின் பெரிய தாலுகாவாகவும் விளங்கியது. அப்போது 411 ஊர்களும் இதில் அடக்கம் பெற்றிருந்தது. பின்னர் வந்தவாழ் தாலுகாவின் ஒரு பகுதியை பிரித்து புத்தூர் தாலுகா உருவாக்கப்பட்டது.[1] மயிசூர் நாட்டுக்கு தேவைப்படுகின்ற பொருட்களை வந்தவாழ் வழியாகவே அந்நாடு இறக்குமதி செய்து வந்தது. இதனால் பல வணிகர்கள் இங்கு குடியேறினார்கள். வந்தவாழ்வில் பல்வேறு சமூகங்கள் இன்று வாழ்ந்து வருகின்றன வில்லவர், முஸ்லிம் மாப்பிள்ளையார், வந்தர்கள், கொங்கணியர் மற்றும் சமணர் ஆகியோர் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.[2]