வனவிலங்கு புகைப்பட நகைச்சுவை விருதுகள்

வனவிலங்கு புகைப்பட நகைச்சுவை விருதுகள் (Comedy Wildlife Photography Awards) என்பது பால் ஜாய்ன்சன்-ஹிக்ஸ் மற்றும் டாம் சுல்லம் ஆகியோரால் 2015ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலகளாவிய புகைப்படம் விருது ஆகும்.[1][2] வனவிலங்குகளையும் அவற்றின் சுற்றுப்புறங்களையும் பாதுகாப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த விருது நிறுவப்பட்டது. நகைச்சுவையான படங்களைக் காட்சிப்படுத்துவதன் மூலம் போட்டி உலகளாவிய பின்தொடர்பைப் பெற்றுள்ளது. மேலும் பாதுகாப்பு விழிப்புணர்வை உருவாக்குவதற்கான புதிய அணுகுமுறையை வழங்குகிறது. நகைச்சுவை வனவிலங்கு புகைப்பட விருதுகள் நடாலி கலஸ்டியன் [3] ஜோயல் சைமன்ஸ் மற்றும் பிளிங்க் பப்ளிஷிங் ஆகியோருடன் இணைந்து 3 அதிக அளவில் விற்பனையான புத்தகங்களை வெளியிட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் மைக்கேல் வுட் இதன் மூன்றாவது இயக்குநராகச் சேர்ந்தார். 2019ஆம் ஆண்டில் வருடாந்திர வனவிலங்கு மற்றும் கானக பயண கண்காட்சியில் 40 இறுதிப் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.[4] இந்த போட்டியில் கலந்துகொண்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி உலகெங்கிலும் கண்காட்சிகள் நடத்தப்பட்டது. மேலும் சமீபத்தில் மற்றொரு புதிய போட்டித் தொடங்கப்பட்டது. இது மார்சு பெட்கேருடன் இணைந்து நகைச்சுவை செல்லப் பிராணி புகைப்படம் எடுத்தல் விருதாகும்.

வெற்றியாளர்களின் பட்டியல் தொகு

  • ஜூலியன் ராட் (படம்: ரஷ் ஹவர்) (2015) [5]
  • ஆடம் பார்சன்ஸ் (படம்: ஏஞ்சல் கரடி) (2016) [6]
  • திபோர் கெர்க்ஸ் (படம்: உதவி) (2017) [7]
  • மேரி மெகுவன் (படம்: சட்டத்தில் பிடிபட்டார்) (2018) [8]
  • சாரா ஸ்கின்னர் (படம்: வாழ்க்கையைப் பற்றிக் கொள்ளுங்கள்) (2019) [9]

மேற்கோள்கள் தொகு

  1. "Comedy Wildlife Photography Awards - Paul Joynson-Hicks & Tom Sullam, Tom Sullam - 9781911600534 - Allen & Unwin - Australia". www.allenandunwin.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  2. Lakritz, Talia. "The Comedy Wildlife Photography Awards are accepting submissions for their 2020 contest — here are the most hilarious photos so far". Insider. U.S.: Insider.com. பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.
  3. "Bonnier snaps up Comedy Wildlife Photography Awards book | The Bookseller". www.thebookseller.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  4. "Comedy Wildlife Photography Awards". Wildlife Safari (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  5. "13 Funny Winners Of The 2015 Comedy Wildlife Photography Awards". Bored Panda (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  6. Traveller, Condé Nast. "The funniest wildlife photos you'll ever see". CN Traveller. பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  7. "Nature's funny moments compete for prize" (in en-GB). https://www.bbc.com/news/in-pictures-42370195. 
  8. "2018 Winners :: Comedy Wildlife Photography Awards - Conservation through Competition". www.comedywildlifephoto.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
  9. "Comedy Wildlife Awards: The winning image". BBC News. UK: BBC News. 2019-11-13. பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.