வரட்டனப்பள்ளி இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்

இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனப்பள்ளி என்ற சிற்றூரில் அமைந்துள்ள ஒரு நரசிம்மர் கோயிலாகும்.[1]

அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:வரட்டனப்பள்ளி
சட்டமன்றத் தொகுதி:கிருஷ்ணகிரி
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:இலட்சுமி நரசிம்மர்

தொன்மவியல்

தொகு

அர்சுனனின் கொள்ளுப் பேரனான ஜனமேஜய மன்னன் ஒரு வேள்வி நடத்தும்போது அதில் அந்தணர் ஒருவர் தவறி விழுந்து இறந்துவிட்டார். இதனால் ஜனமேஜயருக்கு பிரம்மஹத்தி தோசம் பீடித்தது. இந்த தோசம் நீங்கவேண்டி ஐந்து நரசிம்மர் கோயில்களை அமைத்ததாகவும், அதில் ஒரு கோயில் இது எனப்படுகிறது.

கோயில் அமைப்பு

தொகு

கருவறையை மட்டும் கொண்டதாக அக்காலத்தில் கட்டப்பட்டதாக இக்கோயில், பிற்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலானது மூன்று நிலை இராசகோபுரத்துடன் அமைந்துள்ளது. இராச கோபுரத்தை தாண்டி நுழைந்தால் ஹயகிரீசுவரர், வீர ஆஞ்சனேயர் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூலவருக்கு எதிரில் கருடாழ்வாருக்கு சிறிய சந்நிதி உள்ளது. இதையடுத்து மகாமண்டபம், அர்த்தமண்டபம் கருவறை என கோயில் அமைந்துள்ளது. கருவறையில் மகாலட்சுமியை மடியில் தாங்கியபடி நரசிம்மர் சாந்தமாக காட்சியளிக்கிறார். கோயில் வளாகத்தில் உள்ள சத்திய நாராயணர் மண்டபத்தில் சத்தியவதி, ரமாதேவி ஆகியோருடன் சத்தியநாராயணர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். பிரகாரத்தில் சிறிய சயன நரசிம்மரின் சிற்பம் உள்ளது. [2]

வழிபாடு

தொகு

சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. வைகுண்டேகாதசியன்று சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. பௌர்ணமியன்று சத்தியநாராயண பூசையும், அமாவாசையன்று சுதர்சன ஹோமமும் நடத்தப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

அமைவிடம்

தொகு

கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் 10 வது கி.மீ தொலைவில் வரட்டனப்பள்ளி உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 5ம் ஆண்டு உற்சவ திருவிழா". செய்தி. தினகரன். 10 அக்டோபர் 2017. Archived from the original on 2017-11-10. பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2018.
  2. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 63–67. {{cite book}}: Check date values in: |year= (help)