வரலாற்று இடம்

வரலாற்றுத் தளம் (Historic site) அல்லது பாரம்பரிய இடம் என்பது அதிகாரபூர்வமான அரசியல், ராணுவம், கலாச்சார, பாரம்பரிய மற்றும் சமூக வரலாற்று இடங்கள் அதன் கலாச்சார பாரம்பரிய மதிப்பிற்காக பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக வரலாற்று இடங்கள் சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றது மற்றும் பல அமைவிடங்கள் அதிகாரபூர்வமான வரலாற்று இடங்கள் என்ற அங்கீகாரம் பெற்றன. மேலும் பல அதிகாரப்பூர்வ வரலாற்று அந்தஸ்துடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஒரு வரலாற்றுத் தளம் உள்ளூர், பிராந்திய, தேசிய அல்லது உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு கட்டிடம், நிலப்பரப்பு, தளம் அல்லது கட்டமைப்பாக இருக்கலாம். வழக்கமாக இது குறைந்தது 50 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.[1]

ஐரோபாவில் மிகவும் பிரபலமான ஒரு வரலாற்று இடம், பண்டைய இரோம் நகரின் பாம்பேய்.
துயோல் சிலெங் இனப்படுகொலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சித்திரவதை இரும்புப் படுக்கை.

வரலாற்று இடத்தின் பார்வையாளர்கள்

தொகு

வரலாற்று இடம் மற்றும் பாரம்பரிய இடம் அனேகமாக பொதுமக்கள் பார்வையிடுவதற்காக பராமரிக்கப்படுகிறது. கடந்துபோன சாகாப்தம் நினைவால் ஏற்படும் ஏக்கம், கலாச்சார பாரம்பரியத்தை பற்றி கற்றுக்கொள்ளும் ஆசை அல்லது வரலாற்று குறிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளும் பொதுவான ஆர்வம் போன்றவற்றுக்காக பார்வையாளர்கள் இவ்விடங்களுக்கு வரலாம்[2][3]. பல இடங்கள் வழிகாட்டுதல் சுற்றுலாக்களை வழங்குகின்றன, பயிற்சி பெற்ற அமைவிட அலுவலர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இவர்கள், அவ்வமைவிடக் காலத்தின் வாழ்க்கை குறித்த விளக்கம் தருகிறார்கள்[3][4]. ஒரு அமைவிடத்தில் பார்வையாளர் மையம் கூட இருக்கலாம், அதிலுள்ள நவீன வசதிகள் வெளி உலகம் மற்றும் வரலாற்று இடத்திற்கு நுழைவாயிலாக விளங்கும் மற்றும் மென்மையாக கையாளும் இடங்களை அதிகமாக பாதிக்காமல் வரலாற்று விவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும்.

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளம்

தொகு

உலக பாரம்பரியத் தளம் என்பது யுனெஸ்கோ மூலம் நிர்வகிக்கப்படும் சர்வதேச மாநாட்டின் சட்டப் பாதுகாப்புடன் கூடிய வரலாற்று தளமாகும்.

ஜூன் 2023 நிலவரப்படி, 167 நாடுகளில் மொத்தம் 1,157 உலக பாரம்பரியத் தளங்கள் (900 கலாச்சார, 218 இயற்கை மற்றும் 39 கலப்பு பண்புகள்) உள்ளன.

உலக பாரம்பரியத் தளங்கள் பெரும்பாலும் ஏராளமான பார்வையாளர்களை ஈர்க்கின்றன. சீனாவின் தடைசெய்யப்பட்ட நகரம், 12.4 மில்லியன் வருடாந்த பார்வையாளர்களைக் கொண்ட சீனாவின் தடுக்கப்பட்ட நகர்[5] மற்றும் 11 மில்லியன் வருடாந்த பார்வையாளர்களைக் கொண்ட அமெரிக்காவின் பெரும் புகைமலை[6] ஆகியவை 14 மில்லியன் வருடாந்த பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "FAQ – Landmark Society". Archived from the original on 3 November 2021. பார்க்கப்பட்ட நாள் 15 August 2020.
  2. Alderson, William T.; Low, Shirley Payne (1985-01-01). Interpretation of Historic Sites. Rowman Altamira. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761991625.
  3. 3.0 3.1 Levy, Barbara Abramoff; Lloyd, Sandra Mackenzie; Schreiber, Susan Porter (7 February 2002). Great Tours!: Thematic Tours and Guide Training for Historic Sites. Rowman Altamira. p. xii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780759116757.
  4. Metin Kozak, Luisa Andreu, Progress in Tourism Marketing (2013), p. 134.
  5. The Forbidden City was listed as the "Imperial Palace of the Ming and Qing Dynasties" (Official Document). In 2004, Mukden Palace in Shenyang was added as an extension item to the property, which then became known as "Imperial Palaces of the Ming and Qing Dynasties in Beijing and Shenyang": "UNESCO World Heritage List: Imperial Palaces of the Ming and Qing Dynasties in Beijing and Shenyang". Retrieved 2007-05-04.
  6. "National Park Service". Nps.gov. 2012-11-06. பார்க்கப்பட்ட நாள் 2013-01-02.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரலாற்று_இடம்&oldid=4046986" இலிருந்து மீள்விக்கப்பட்டது