வரலாற்று மீட்டுருவாக்கக் கோட்பாடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வரலாற்று மீட்டுருவாக்கக் கோட்பாடு என்பது நாட்டுப்புற ஆய்வியல் கோட்பாடுகளுள் ஒன்றாகும். ஆதாரம் கிடைக்காத ஒரு கால கட்டத்தின் வரலாற்றை நாட்டுப்புறச் சான்றுகளைக் கொண்டு உருவாக்குவதற்கு வரலாற்று மீட்டுருவாக்கக் கோட்பாடு என்று பெயர். 19ஆம் நூற்றாண்டில் ஜேக்கப் கீரிமின் இக்கொள்கை நாட்டுப்புறவியல் அறிஞர்களைக் பெரிதும் கவர்ந்தது. ஆனால், டார்வினின் பரிணாமக் கொள்கை வெளிவந்தவுட னே இக்கொள்கைக்கு அவ்வளவு மதிப்பில்லை என்றே கூறலாம். ஜார்ஜ் லாரன்ஸ் கொம்மே அவர்கள் ஆய்வு செய்து 'நாட்டுப்புறவியல் ஓரு வரலாற்று அறிவியல்' எனப் பல தொகுதிகள் வெளியிட்டார்.நாட்டுப்புற வழக்காற்றில் ஆரியர் பழக்கங்களையும் ஆரியருக்கு முந்திய பழக்கங்களையும் அவர் பிரித்தறிந்தார். மரபுவழி வரலாற்றுச் செய்திகளில் அந்த அளவிற்கு வரலாற்று உண்மைகள் பொதிந்துள்ளன ராக்லன், இராபார்ட்லூயி போன்றோர் வரலாற்று மரபுச் செய்திகளைப் புராணக் கதைகள் என ஒதுக்கிவிட்டனர்.ஹெக்டர் நோரா சாட்சிக் போன்றவர்கள் நாட்டுப்புற இலக்கியங்களில் வரலாற்றுச் செய்திகள் இருப்பதைக் கண்டனர்.இராமப்பையன் அம்மானை தேசிங்கு ராசன் கதை காட்சிக்கு சண்டை போன்ற வரலாற்றுக் கதைப்பாடல்கள் வரலாற்றை அறியப் பெரிதும் துணைபுரிகின்றன..இராமப்பையன் அம்மானை கதைப்படி நாயக்கர் வரலாற்றுடன் ஒப்பிட்டு வரலாற்றுச் செய்திகளைக் காணலாம்.