வருடை
வருடை, வருடைமான், என வழங்கப்பட்ட விலங்கினம் காடுகளில் தானே மேயும் மானினம் அல்லது ஆட்டினம்.
வருடைமான் பற்றிய சங்கநூல் குறிப்புகள்
தொகு- வருடையின் கால் நகங்கள் நாயின் நகங்கள் போல இருக்கும். [1]
- வருடைக் குட்டி மலைப்பாறைகளின் மேல் ஏறி இறங்கி விளையாடும். [2]
- வருடை குத்துநிலைப் பாறைகளிலும் ஏறும் \செவ்வரைச் சேக்கை வருடைமான் மறி [3]
- வருடை அச்சம் தரும் பாறை அடுக்கங்களில் பாய்ந்து சண்டையிட்டுக்கொண்டு விளையாடும். தலைவன் தந்த ஆடை அந்த அடுக்கங்களில் பறித்துவந்து தைக்கப்பட்டது.[4]
- வருடை தன் குடும்ப இனத்தை ஆட்டிவைக்கத் துள்ளி விளையாடும்போது பெரிய கலைமான்களும் சேர்ந்து விளையாடும் [5]
- வருடையை அதன் குழவிப் பருவத்திலேயே பிடித்துவந்து மக்கள் வளர்ப்பது உண்டு. [6]
- வருடை கிளிகளை வெறுக்கும் [7]
- வருடைக்குட்டியானது படுத்துறங்கும் பெண்யானை மேல் ஏறி விளையாடும் [8]
- வருடை தண்டாரணிய நிலப்பகுதியிலும், நன்னன் நாட்டு மலைப்பகுதிகளிலும் மிகுதியாக வாழ்ந்தன. [9]
- வரைவாழ் வருடை, நன்னன் மலையில் காணப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள 12 விலங்கினத்தில் ஒன்று,[10]
மலைபடுகடாம் நன்னன் மலைநாட்டில் வாழ்ந்த 12 விலங்கினம்
தொகு- ஆமான் – மடநடை போடும்
- உடும்பு – அரக்கு போல் பிடி விடாத்து
- உழுவை – அளைக்குகைகளில் வாழ்வது
- கரடிக்குட்டி, எண்குக் குருளை – குடா அடி கொண்டது, ஊமை
- கழுகு – பாம்பைக் கொன்று உண்ணும் தீர்வை
- கானக்கோழி – (விட்டிசை போல்) கவர்குரல் எழுப்பும்
- தகர் – வலிமையான தலை கொண்ட ஆடு
- புலி, - கவர்பரிக் கொடுந்தாள்
- மஞ்ஞை – மலைக்கு அழகு தரும் மயில்
- மரையான் குழவி – பெரிய காதுகளைக் கொண்டது
- யானக்குட்டி - கயமுனிக் குழவி
- வருடை, - வரையில் வாழ்வன
வருடையை ஒப்புமையால் மேழ-ஓரை (மேஷ ராசி) என்று கூறி நாள் குறிக்கின்றனர். [11]
வருடையைச் சரபம் என்னும் எட்டுக்கால் விலங்கு என்பது புராணச் செய்தி.
அடிக்குறிப்பு
தொகு- ↑ வரையாடு வருடைத் தோற்றம் போலக் கூர்உகிர் ஞமலி – பட்டினப்பாலை 139
- ↑ இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும் வருடைமான் குழவி – கலித்தொகை 43-14
- ↑ குறுந்தொகை 187
- ↑ அவன்தலைப் போருடை வருடையும் பாயாச் சூருடை அடுக்கத்த கொயற்கு அருந்தழையே - நற்றிணை 359
- ↑ கருங்கலை கடும்பாட்டு வருடையொடு தாவன உகளும் - நற்றிணை 119
- ↑ வழைவளர் சாரல் வருடை நன்மான் குழவி வளர்ப்பவர் போல, தலைவியைப் பாராட்டி வளர்க்க வேண்டும் – கலித்தொகை 50-21
- ↑ நெடுவரை மிசையது குறுங்கால் வருடை தினைபாய் கிள்ளை வெறூஉம் - ஐங்குறுநூறு 287
- ↑ இரும்பிடி … வருடை மடமறி ஊர்விடைத் துஞ்சும் – கலித்தொகை 50-4
- ↑ தண்டாரணியத்துப் பற்றுக்கோட்பட்ட வருடையைத் தொண்டியுள் தந்து கொடுப்பித்து - பதிற்றுப்பத்து பதிகம் 6
- ↑ மலைபடுகடாம் 503
- ↑ வருடையைப் படிமகன் வாய்ப்பு - பரிபாடல் 11-5