வருணாஸ்திரம்

வருணாஸ்திரம் என்பது இந்து தொன்மவியலின்படி வருணனின் ஆயுதமாகும். இவ்வாயுதம் நீரினைப் போல பல்வேறு வடிவங்களுக்கு மாறும் தன்மையுடையது. எண்ணற்ற வீரர்களால் இவ்வாயுதம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகப் புராணங்களில் குறிப்புகள் உள்ளன.

அக்னியாஸ்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட தீயினை வருணாஸ்திரத்தைக் கொண்டு போர் வீரர் தடுப்பதாக புராணங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.

பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் சதி-சுலோசனா நாடகத்தில் இந்திரஜித் இலட்சுமணன் போரில் இவ்வாயுதம் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. [1]

ஆதாரம்

தொகு
  1. http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0429.html பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் சதி-சுலோசனா (ஒரு தமிழ் நாடகம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருணாஸ்திரம்&oldid=1830990" இலிருந்து மீள்விக்கப்பட்டது