வருமான வரி (சங்ககாலம்)
சங்ககாலத்தில் வருமானத்தைக் கணக்கிட்டு வரி விதிக்கும் பழக்கம் இருந்தது. காவலர்கள் கணக்கிடும் அலுவலர்களாகச் செயல்பட்டனர். எவ்வாறு கணக்கிட்டனர் என்பது தெரியவில்லை ஆயினும் கணக்கிடும்போது கணக்கிடும் காவலர்களும், கணக்கீட்டுக்கு உள்ளானவர்களும் பெரிதும் வருந்தினர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரவு வேளையில் மழை பொழிந்துகொண்டிருந்தபோது காதலன் காதலிக்காகக் காத்திருக்கும் வேளையில் காதலி பட்ட துன்பம் வரிக் கணக்கிடும் காவலனும், வருமானக் காரரும் படும் துன்பம் போல இருந்ததாம். [1]
மேற்கோள் குறிப்பு
தொகு- ↑ அஞ்சுவரு பொழுதினானும், என் கண்
துஞ்சா வாழி தோழி! காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி, என்
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே. (குறுந்தொகை 261)