வரையெல்லை (நிரலாக்கம்)
வரையெல்லை என்பது மாறிகளும் கோவைகளும் வரையறை செய்யப்பட்ட ஒரு வெளி. ஒரு குறிப்பிட்ட வரையெல்லைக்குள் ஒரு மாறி வரையறை செய்யப்பட்டால், அந்த வரையெல்லைக்குள் மாத்திரமே அதைப் பயன்படுத்த முடியும். வேறு ஒரு வெளியில் இருந்து பயன்படுத்துவது என்றால் அந்த வரையெல்லையை சிறப்பாக குறிப்பிட்டு அழைக்க வேண்டும். வெவ்வேறு நிரல் மொழிகளில் வரையெல்லைகள் வெவ்வேறு மாதிரி நிறைவேற்றப்படும்.