வரைவியல்
வரைவியல் என்பது நம்பி அகப்பொருள் நூலில் உள்ள மூன்றாம் பிரிவாகும்.
வரைவியல் பொருள்
தொகுவரைவு என்பது திருமணத்தினை குறிக்கும். எனவே திருமணம் மற்றும் அதனைச் சார்ந்த செய்திகளை குறிக்கும் பகுதியாகும்.
பாடல் எண்ணிக்கை
தொகுஇப்பகுதியில் 29 நூற்பாக்கள் உள்ளன.
கூறப்படும் செய்திகள்
தொகுபின்வரும் பல செய்திகளை வரைவியல் உரைக்கிறது[1]:
- வரைவு மலிதல்.
- அறத்தொடு நிற்றல்.
- களவு வெளிப்படும் சூழலில் நிகழும் உடன்போக்கு, கற்பொடு புணர்ந்த கவ்வை, மீட்சி என்னும் மூவகைக் கிளவித் தொகைகள்.
- உடன்போக்கின் வகை, விரிவு.
- செவிலி புலம்புதல், நற்றாய் புலம்புதல், மருட்சி, கண்டோர் இரங்குதல், செவிலி பின்தேடிச் செல்லுதல் என்னும் கற்புத் தொடர்பான கவ்வையின் வகைகள்.
- மீட்சி என்பதன் வகை, விரிவு.
- தன்மனை வரைதலின் விரிவு.
- உடன்போய் வரைந்து மீளுதலின் விரிவு.
- உடன்போக்கில் இருந்து மீண்டு வரைவதன் விரிவு.
- உடன்போக்கு இடையீட்டு வகையின் விரிவு.