வரைவு:சேகர் கிருஷ்ணசாமி
சேகர் கிருஷணசாமி தமிழ்நாடு மாநிலம் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் கட்டளைக்குடியிருப்பு ஊரில் வசித்து வருபவர். பிறப்பு 2-4-1972. பெற்றோர் கிருஷ்ணசாமி - ராசாத்தி
கல்வி: பள்ளிப்படிப்பை கட்டளைக்குடியிருப்பு நடுநிலைப் பள்ளியிலும், செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேனி லைப் பள்ளியிலும், கல்லூரி படிப்பை திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரியிலும் படித்தவர்.
பணிகள்: சொந்த கிராமமான கட்டளைக்குடியிருப்பில் இலவச மாலைநேர தனியார் கல்விச் சாலையை நிறுவி அதன் மூலம் மக்களிடையே செல்வாக்கு பெற்றவர்.
1996 ல் தனது 24 வயதிலேயே உள்ளாட்சி தேர்தலில் நின்று வெற்றி பெற்று செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கற்குடி ஊராட்சியின் தலைவராக மாறினார். தனது கடுமையான தொண்டால் மீண்டும் 2001 உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கற்குடி ஊராட்சி மன்றத் தலைவராகத் தொடர்ந்தார். இவரது ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட பல உள்கட்டமைப்புகள் கற்குடி ஊராட்சி பகுதிகளில் இன்று வரை அவரை நினைவு படுத்துகின்றன. செங்கோட்டை மேற்கு பகுதிகளுக்கு தாமிரபரணிக் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் வரக் காரணமாக இருந்தவர்.
இலக்கிய வானில் பெரும்பாலானவர்களால் அறியப்பட்ட நூல் விமர்சகராக தமிழ் ப்பணியாற்றி வருகிறார். சிறந்த எழுத்தாளர்வம் மிக்க இவர் எழுதும் கட்டுரைகளும் கவிதைகளும் நூல் விமர்சன கட்டுரைகளும் மிகப் பிரபலமானவையாக இணையத்தில் கிடக்கின்றன.
தலித் வாழ்வியல், தலித் அரசியல், தலித் போராட்டங்கள், தலித் படைப்புகள், பகுத்தறிவு ஆகியன குறித்து இவர் எழுதும் இணையப் பதிவுகள் இளைஞர்களிடமும் வாசகர்களிடமும் சிறப்பான தாக்கங்களைத் தந்திருக்கின்றன. தலித் மற்றும் மக்கள் தொடர்புடைய வாழ்வியல்களை தேடி ஆய்வு செய்யும் இவர் மிகச்சிறந்த பேச்சாளரும் கூட.
இலவசமாக வழிகாட்டல்கள் மூலம் பலநூறு இளைஞர்களை அரசு அலுவலர்களாக மாற்றி தென்காசி மாவட்டத்தில் சிறந்த கல்விச் சேவையாளராகத் திகழ்கிறார். இதற்காக பல ஊடகங்கள், தனியார் நிறுவனங்களின் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.