வரைவு:தகடூர் புத்தகப் பேரவை

நூல்கள் மனதிற்கு இறக்கைகளைக் கொடுக்கிறது. கற்பனைகளை பறக்கச் செய்கிறது.

அனைத்திற்கும் உயிரை தருகிறது.

இந்த உலகிற்கு உயிர்ப்பைத் தருகிறது.


தருமபுரி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு நிலம். தான் நூறாண்டுகள் வாழ்வதை விட, தமிழ் வாழ வேண்டும். தமிழ் வாழ வேண்டுமென்றால் தமிழ் மூதாட்டி ஒளவையார் வாழ வேண்டும் என்று அரிய நெல்லிக்கனியை தமிழ் மூதாட்டிக்கு வழங்கி தமிழ் காத்த குடி இந்த மண்ணின் குடி. சமணமும், பௌத்தமும் தழைத்த வரலாற்றுப் பெருமை மிக்க இந்த மாவட்டத்திற்கு பின்தங்கிய மாவட்டம் என்ற சொல் பொருளாதார அடிப்படைக்கு மட்டுமே இருக்க முடியும்.

முற்போக்கு எண்ணங்களை கொண்ட சமுதாய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிற மாவட்டம் தருமபுரி மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு இன்னமும் பெருமை சேர்க்கிற வண்ணம் 2018 ஆம் ஆண்டு ஒத்த முற்போக்கு சிந்தனை கொண்டவர்களால் தகடூர் புத்தகப் பேரவை தொடங்கப்பட்டது.