வரைவு:போந்தூர் கனகசுந்தரம்

போந்தூர் கனகசுந்தரம் தொகு

போந்தூர் கனகசுந்தரம் என்கிற நாவலாசிரியர் புதுக்கவிதையாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் திகழ்கிரார். தொகு

படிமம்:Pho copy.jpg
பெயர் : போந்தூர் கனகசுந்தரம் பெற்றோர் : திரு.கோதண்டன் மங்கையர்கரசி பிறப்பு : I5.07.1956

வாழ்க்கை குறிப்பு: தொகு

பெயர் : போந்தூர் கனகசுந்தரம்

பெற்றோர் : திரு.கோதண்டன் மங்கையர்கரசி

பிறப்பு : I5.07.1956

பிறந்த ஊர் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திலுள்ள போந்தூர் கிராமம்.


தந்தையார் ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியர், உயர்நிலை பள்ளியில் 1977 ஆம் ஆண்டு தனது பதினோரம் வகுப்பு பள்ளி படிப்பை போந்தூர் கனகசுந்தரம் நிறைவு செய்தார்.

இவர் இடதுசாரி சிந்தனையாளர். இவரது படைப்புகளில் முற்போக்கு கருத்துகளை தாங்கிவரும் பாத்திரங்களே அழுத்தமாக இருக்கும்.

பெண்கல்வி, சாதி ஒழிப்பு ஆகிய பகுத்தறிவு சிந்தனைகளே பாத்திரங்கள் வழியாக பேசப்பட்டிருக்கும்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்திலும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்திலும் தனது பங்களிப்பை செய்துவருகிறார். தொகு

பஞ்சமி நில மீட்பு இயக்கமான தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமை முன்னனி மாநில குழுவில் களப்பணியாற்றிவருகிறார்.

இயல்பாகவே கற்பனையாக சிறுகதை எழுத இளம் வயதிலேயே ஆர்வமுள்ளவராக இருந்தவர். ஆனால் தனது நாவல்களிலும், சிறுகதைகளிலும் சமூகத்தில் நிகழும் சம்பவங்களையும், தன்னையும், சமுதாயத்தையும் பாதித்துவரும் போக்குகளையும் தனது படைப்புகளில் கொண்டுவந்திருக்கிறார்.

அவர் எழுதிய புதினங்கள் தொகு

அவர் எழுதிய புதினங்கள்
புதினங்கள் வெளியிடப்பட்ட ஆண்டு
மாலைகள் 2017
முள்வேலிகள் 2018
அம்பராத்தூணி 2019
வெட்டிவேர் 2022
புழுதிபூக்கள் 2023
கீழேயும் ஒரு வானம் 2023

இவை தவிர

குறும் புதினங்கள்
புதினங்கள் ஆண்டு
கொம்புத்தேன் 2020
சாமிதரிசனம் 2023
போதிமரங்கள் 2023
சிறுகதைகள்
அருகம்புல்
தீக்குள் விரலை வைத்தால்
சவுக்கு
செல்வாக்கு
புரட்சி வயல்
காவல்
ஒன்றே சொல்
கவிதை தொகுப்பு
மலர்வனம்
பதிப்புக்காக காத்திருக்கும்
காட்டுமல்லி சேவகம் நேர்க்கோடு

நூல்களின் விவரம் தொகு

மாலைகள்: தொகு

திருநங்கைகள் வாழ்வு குறித்து எழுதப்பட்ட சிறந்த நாவலாகும்.

இந்நாவல் மதுரை திருநங்கைகள் ஆவணக் காப்பகத்தில் முன்மை நூலாக வைக்கப்பட்டுள்ளது.

முள்வேலிகள்: தொகு

பொது சேவைகள் மூலமே சமூக ஒற்றுமையை, சாதிகளுக்கிடையேயான நல்லிணக்கம், சாதி மறுப்பு திருமணம் ஆகியவற்றை வலியுறுத்தும் நாவலாகும்.

அம்பராத்தூணி: தொகு

மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்களில் வரும் முதன்மை காதாப்பாத்திரங்களை மாற்று சிந்தனையோடு கொண்டுவந்த புதினமாகும்.

வெட்டிவேர்: தொகு

இந்தியாவின் தொல்குடி மக்களில் நாகரிக வாழ்வும், உலகில் தமிழ்ர்களின் நான்கு குடிகளில் பறையர் இனத்தின் மேன்மைமிகு வரலாறுகளை சொல்லும் நாவலாகும்.

கீழேயும் ஒரு வானம்: தொகு

தமிழ்நாட்டு மக்களை சீரழிக்கும் மதுபான கடைகளை முற்றாக மூடுவதற்கு மக்களின் ஒருமித்த போராட்டங்களே தீர்வை கொண்டுவரும் என்று தெளிவுபடுத்தும் புதினம்.

புழுதிபூக்கள்: தொகு

கைம்பெண்களுக்கு நிகழும் சமூக சிக்கல்களையும் அவர்களிலும் வயது முதிர்ந்த கைம்பெண்களுக்கும் மறுமணம் அவசியம் என்பதை சொல்லும் நாவல்.

பெற்ற விருதுகள்: தொகு

1 சாதனையாளர்விருது டாக்டர் அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை, இவரது சமூக பணிகளை பாராட்டி சாதனையாளர் விருதினை 2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

2 தமிழ்ப் போரொளி விருது 2023 ஆம் ஆண்டு மார்ச் 11 தருமபுரி தமிழ்கலை இலக்கிய மையம், தகடூர் கலை இலக்கிய பண்பாட்டுத் தளம் நடத்திய விழாவில் தமிழ்ப் போரொளி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

3 எழுத்துச் சிற்பி விருது அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் எழுத்தாளரின் கீழேயும் ஒரு வானம் நாவலை வெளியிட்டு இவருக்கு எழுத்துச் சிற்பி விருது வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.

4 சிறந்த படைப்பாளி விருது மற்றும் சான்றிதழ் செங்கல்பட்டு மாவட்ட அளவிளான எழுத்தாளர்கள் சங்கம் இவரை சிறந்த படைப்பாளி என்று பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது.

தினம் ஒரு திருக்குறள்: தொகு

அனுதினமும் அதிகாலை வேலையில் திருக்குறள் பேசி பொழிப்புரைக்கு ஆதாரமாக சமூக நிகழ்வுகளையும், அனுபவங்களையும் சேர்த்து உரை நிகழ்த்தி வருகிறார்.

புத்தக உறை தொகு