வர்க்கமூல நாள்
வர்க்கமூல நாள் (Square Root Day) என்பது குறிப்பிட்ட நாளொன்றின் நாள் மற்றும் மாதங்களைக் குறிக்கும் எண்கள் இரண்டும் அந்நாளுக்குரிய ஆண்டினைக் குறிக்கும் நான்கு இலக்க எண்களில் வலதோர இரு இலக்க என்ணின் வர்க்கமூலமாக உள்ள நாளைக் குறிக்கும்.[1]
எடுத்துக்காட்டு: 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் நாளானது 4/4/16 எனக் குறிக்கப்படுகிறது. இதில் நாள் மற்றும் மாதத்தைக் காட்டும் 4 என்ற எண்ணானது ஆண்டைக் காட்டும் ”16” இன் வர்க்கமூலமாக உள்ளது. மற்றொரு எடுத்துக்காட்டு மே 5, 2025 (5/5/25) ஆகும். இருபத்தியோராம் நூற்றாண்டின் இறுதி வர்க்கமூல நாள் செப்டம்பர் 9, 2081 ஆக இருக்கும்.
ஒரு நூற்றாண்டின் வர்க்கமூல நாட்கள்
தொகுஒவ்வொரு நூற்றாண்டிலும் மொத்தம் 9 வர்க்கமூல நாட்களே ஏற்படும். எல்லா நூற்றாண்டுகளிலும் அதே ஒன்பது நாட்களே வர்க்கமூல நாட்களாக இருக்கும். அவை:
- 1.1.01
- 2.2.04
- 3.3.09
- 4.4.16
- 5.5.25
- 6.6.36
- 7.7.49
- 8.8.64
- 9.9.81
அடுத்தடுத்த வர்க்கமூல நாட்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளின் எண்ணிக்கை தொடர் ஒற்றையெண்களாக அமைவைதைக் காணலாம்:
- 3, 5, 7, 9, 11, 13, 15, 17.
ஒவ்வொரு ஒற்றையெண்ணும் அடுத்தடுத்துள்ள இரு வர்க்க எண்களின் வித்தியாசமாக இருக்குமென்ற பண்பை இது காட்டுகிறது.
அறிமுகம்
தொகுகணிதத்தின் இந்தப் பண்பை அறிமுகப்படுத்தியவர் ரோன் கார்டன் என்ற கலிஃபோர்னிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியராவார்.[2] அமெரிக்கப் பள்ளிகளில் இந்த ஒன்பது நாட்களும் அறிவிக்கப்படாத விடுமுறை நாட்கள் ஆகும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Wong, Nicole C. (2004-02-02). "A day getting to the root". The Mercury News இம் மூலத்தில் இருந்து 2004-08-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040818204722/http://www.mercurynews.com/mld/mercurynews/news/7854616.htm. பார்த்த நாள்: 2007-02-20.
- ↑ Hill, Angela (2009-03-02). "Have a rootin' tootin' Square Root Day". Oakland Tribune. http://www.insidebayarea.com/oaklandtribune/localnews/ci_11821782?source=rss. பார்த்த நாள்: 2009-03-02.
- ↑ தினமலர்(09.07.2017). "வர்க்கமூல தேதிகள்". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 6 சூலை 2017.