வலிந்து தாக்குதல்

வலிந்து தாக்குதல் என்பது படையியல் இலக்குகளை முன்வைத்து திட்டமிட்டு வலிந்து மேற்சென்று எதிரியைத் தாக்குவதைக் குறிக்கும். இடத்தை அல்லது தளங்களை பிடிப்பதற்காக, மூல வளங்களைச் சிதைப்பதற்கா, பிற மூலோபாய அல்லது போர் உத்தி இலக்குகளுக்காக வலிந்து தாக்குதல் மேற்கொள்ளப்படும். தற்காப்புத் தாக்குதலை விட வலிந்து தாக்குதலுக்கு கூடிய அனுபவம் மிக்க ஆட்பலம் தேவை. தேவையான அளவு சுடுதிறனும், ஆயுத பலமும் தேவை. களமுனைத் தாக்குதலுக்கு முன்னரே இலக்கை வேவு பாத்து, தமது வள கள சூழ்நிலைகளுக்கேற்ப போர் திட்டம் அல்லது வியூகம் அமைக்கப்பட வேண்டும். இவற்றுக்கு கூடிய மதிநுட்ப திறன் வேண்டும். பெரிய தாக்குதலுக்கு முன்னர் கடும் பயிற்சியும், மாதிரி தாக்குதலும் மேற்கொள்ளப்படுவதுண்டு. தாக்குதலின் போது ஒருங்கிணைப்பும் வழங்கலும், தேவைப்பட்டால் மேலதிக உதவியும் கொடுக்கப்படவேண்டும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலிந்து_தாக்குதல்&oldid=2750663" இலிருந்து மீள்விக்கப்பட்டது