வலையொலி
வலையொலி அல்லது வலையொலிபரப்பு (podcast) என்பது இணையத்தில் எண்ணிம வடிவத்தில் பதிவிறக்கம் செய்யக்கூடிய ஒலிப்பதிவு நிகழ்ச்சியாகும்.[1][2][3] பாரம்பரிய வானொலிகள் போல அலைக்கம்பங்கள் ஊடாக இவை ஒலிபரப்பப்படுவதில்லை. வலையொலிப் பதிவுகள் சேமிக்கப்பட்டு பயனர்கள் விருப்பப்படும் நேரத்தில் கேட்கப்படக் கூடியவை. இன்று பாரம்பரிய வானொலி நிகழ்ச்சிகளும் வலையொலிகளாகக் கிடைக்கின்றன. வலையொலிகள் முதன்மையாக ஒலி ஊடகம் ஆகும், ஆனாலும், சில நிகழ்ச்சிகள் துணை காணொளிக் கூறுகளையும் வழங்குகின்றன.[4]

மேற்கோள்கள்
தொகு- ↑ "Podcast". (Online).
- ↑ "Definition of PODCAST".
- ↑ "Podcast Definition & Meaning | Britannica Dictionary". britannica.com.
- ↑ "Video Podcast: How to Start a Podcast with Video in 5 Steps". riverside.fm. Retrieved 2023-02-21.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் வலையொலி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Podcasting Legal Guide: Rules for the Revolution, information by படைப்பாக்கப் பொதுமங்கள்