வலைவாசல்:கட்டுரைப்போட்டி/விதிகள்
1) மாணவர்கள் தாங்கள் பயிலும் துறை சார்ந்த கட்டுரைகளையே எழுத வேண்டும்.
2) கட்டுரைகள் தங்கள் சொந்த ஆக்கமாகவோ காப்புரிமை அற்ற பிற ஆக்கங்களின் அடிப்படையிலோ அமையலாம். கட்டுரைகளில் சொந்தக் கருத்துகள், சொந்த ஆராய்ச்சி, உயர்வு நவிற்சி, அலங்கார நடை இன்றி, நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் தரவுகளை மட்டும் முன்வைத்து நடுநிலைமையுடன் எழுத வேண்டும். இனம், சமயம், உடல்தோற்ற வேறுபாடுகள் தொடர்பாக வெறுப்பைத் தூண்டாதவாறு இருக்க வேண்டும். இவை தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
3) கட்டுரைச் சொற்களின் எண்ணிக்கை 250 முதல் 500க்குள் இருக்க வேண்டும். (இரண்டு A4 தாள் பக்க அளவு)
4) கட்டுரைகள் யுனிக்கோடு (Unicode) குறிமுறையில் அமைந்த எழுத்துருவில் இருக்க வேண்டும்.
5) கட்டுரைகளை wikicontest@gmail.com என்ற முகவரிக்கு ---------க்குள் அனுப்ப வேண்டும்.
6) கட்டுரைகளின் முழு பயன்பாட்டு உரிமையும் போட்டி அமைப்பாளர்களைச் சேரும். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் உலகளாவிய தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்றப்படும்.
7) தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.