வலைவாசல்:கணினியியல்/முகவுரை

கணினியை மையமாக கொண்ட துறை கணினியியல் ஆகும்.கணினி வன்பொருள், மென்பொருள், கணினியின் பயன்பாடுகள், கணிமையின் அடிப்படைகள் என கணினியை மையமாக கொண்ட பல உட்துறைகளை ஒருங்கே இச் சொல் குறிக்கிறது. அதன் துணை தத்துவார்த்த மற்றும் நடைமுறை துறைகளில் பல்வேறு வகையாக பிரிக்கலாம்.

"கணினியியல்" (Computer Science) என்ற சொல் முதலில் 1959ல் கம்யூனிக்கேஷன்ஸ் ஆப் ஏசிம் (Commuincations of ACM) என்ற மாத நாளிதழில் ஓரு கட்டுரையில் வெளிவந்தது.

கணினியியலை மூன்று கருத்தியல்களாக பிரிக்க வேண்டும் என்று பல கணிணி அறிவியலறிஞர்கள். கருதினர்.பீட்டர் வேக்னர் அவை அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் கணிதம் கருத்தியல்களாக பிரிக்க வேண்டும் என வாதிட்டார்.பீட்டர் டென்னிங் தலைமையிலான குழு கோட்பாடு, சுருக்க (மாதிரியமைத்தல்), மற்றும் வடிவமைப்பு ஆகியவை எனக் கருதியது.