வலைவாசல்:கருநாடக இசை/உங்களுக்குத்தெரியுமா/திங்கள்
- கீதங்கள், கீர்த்தனைகள், பதங்கள் போன்றவற்றை இயற்றுபவர் கருநாடக இசைத் துறையில் வாக்கேயக்காரர் என அழைக்கப்படுவார்.
- மேளகர்த்தா இராகங்கள் கருநாடக இசையின் இராகங்களில், ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு சுரங்களையும் கொண்டவையாகும். வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன.
- 'மதங்கம்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே மிருதங்கம் என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது' எனத் திரிந்தது.